வங்கி பணமோசடி; தாய்வானிலிருந்து இலங்கைக்கு அதிகாரிகள் வருகை | தினகரன்

வங்கி பணமோசடி; தாய்வானிலிருந்து இலங்கைக்கு அதிகாரிகள் வருகை

 
தாய்வானின் பார் ஈஸ்ட்டர்ன் வங்கியின் உத்தியோகத்தர்கள் இருவர் இன்று அதிகாலையில் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
 
தமது வங்கியின் கணனி வலையமைப்பிற்குள் அத்துமீறி நுழைந்து 60 மில்லிய்ன டொலர் பணத்தை வேறு நபர்களின் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பான விசாரணைகளின் பொருட்டே அவர்கள் இலங்கைக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
பா ஈஸ்ட்டர்ன் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள அரச வங்கி ஒன்றின் தனிநபர் ஒருவரின் கணக்கிற்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பணம்  பரிமாற்றம் செய்யப்பட்டமை தொடர்பில் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவன தலைவர் சலீல மூனசிங்க கடந்த திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.
 
நேற்றைய தினம் (11) கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய அவரை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இதேவேளை, பண மோசடி தொடர்பான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் சலீல மூனசிங்கவை அப்பதவியிலிருந்து நீக்குமாறு, அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாளரினால் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவருக்கு நேற்று முன்தினம் (10) அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...