புகையிரத பணி புறக்கணிப்புக்கு மத்தியில் சில சேவைகள் | தினகரன்

புகையிரத பணி புறக்கணிப்புக்கு மத்தியில் சில சேவைகள்

 
புகையிரத சாரதிகள் நேற்றைய தினம் (11) திடீரென ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
 
பணிப்புறக்கணிப்புக்கு மத்தியிலும் சில புகையிரத சேவைகள் இடம்பெற்று வருவதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
 
மாத்தறை - கொழும்பு, அவிசாவளை - கொழும்பு ஆகிய சேவைகளும் பொல்கஹவல, மஹவையில் இருந்து செல்லும் அலுவலக புகையிரதங்கள் கொழும்பு வரை பயணிப்பதாக புகையிரத போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.
 
புகையிரத சாரதி உதவியாளர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் கைக்கொள்ளப்படும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து புகையிர சாரதிகள் மற்றும் காவலர்கள் (Guards) நேற்று (11) இரவு முதல் பணிபுறக்கணிப்புபு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
குறித்த போராட்டம் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களிலிருந்து புறப்படவிருத்த பல புகையிரத சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், பயணிகள் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டனர்.
 
இதனையடுத்து மருதானை மற்றும், கோட்டை புகையிரத நிலையங்களுக்கு பொலிசார் வரவழைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
 
முடியுமான வரை புகையிரத சேவைகளை  முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக புகையிரத போக்குவரத்துத அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்தார்.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...