பாலர் பரீட்சையில் சித்தி பெறாத ஆசிரியர்கள் நீக்கம் | தினகரன்

பாலர் பரீட்சையில் சித்தி பெறாத ஆசிரியர்கள் நீக்கம்

தனது ஆறு வயது மாணவர்களின் பரீட்சையில் தோன்றி சித்தி பெறாத ஆயிரக்கணக்கான ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களை நைஜீரியாவின் வடக்கு கடுனா மாநிலம் பணி நீக்கம் செய்துள்ளது.

மாநிலத்தின் மொத்த ஆசிரியர்களில் மூன்றில் இரண்டு பங்கினரான 21,780 ஆசிரியர்கள் இந்த பரீட்சையில் 75 வீத புள்ளிகளை பெற தவறியிருப்பதாக அந்த மாநில அளுநர் நசீர் அல் ருபாய் குறிப்பிட்டுள்ளார்.

இவர்களுக்கு பதில் 25,000 ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

மாநில தலைநகர் கடுனாவில் உலக வங்கி பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அல் ருபாய் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

“நாம் 33,000 ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களுக்கும் முதன்மை நான்கு பரீட்சையை எழுத வைத்தோம். அவர்கள் 75 வீத புள்ளிகளை பெற கட்டாயமாக்கியபோதும் 66 வீதமானவர்கள் அந்த இலக்கை எட்டவில்லை என்பதை கவலையுடன் தெரிவிக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...