லிட்ரோ கேஸ் தலைவரை நீக்க உத்தரவு | தினகரன்

லிட்ரோ கேஸ் தலைவரை நீக்க உத்தரவு

 
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைமை பதவியிலிருந்து சலீல மூனசிங்கவை நீக்குமாறு அரச தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
 
தாய்வானின் பார் ஈஸ்டர்ன் (Far Eastern International Bank) சர்வதேச வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள அரச வங்கி ஒன்றின் தனி நபர் கணக்கில் வைப்பிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளுக்கு உதவும் வகையில் அவரை அப்பதவியிலிருந்து நீக்குமாறு அமைச்சு அறிவித்துள்ளது.
 
குறித்த நிதி மோசடி தொடர்பில் லிட்ரோ கேஸ் நிறுவன தலைவர் சலீல மூனசிங்க நேற்று முன்தினம் (09) கைது செய்யப்பட்டு நேற்று (10) கொழும்பு கோட்டை நீதவான்  ஆஜர்படுத்திய போது, அவரை இன்றைய தினம் (11) வரை விளக்கமிறயிலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
 
அதன் அடிப்படையில் இன்றைய தினம் (11) மீண்டும் நீதிமன்றில் ஆஜர்படுத்திய அவரை, எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
தாய்வானின் பா(ர்) ஈஸ்டர்ன் சர்வதேச வங்கியின் கணனி வலையமைப்பினுள் அத்துமீறி பிரவேசித்து இணைய வழியில் ஹெக்கிங் (Hacking) செய்து, 60 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணம் களவாடப்பட்டு வேறு நபர்களின் கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவ்வங்கி தெரிவித்துதுள்ளது..
 
இந்நிலையில் இணையள கொள்ளை (சைபர்) மூலம் இலங்கைக்கு 1.3 மில்லியன் டொலர்கள் இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
 
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பொருட்டு தாய்வானின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைக் குழுவொன்று இலங்கைக்கு வருகைதந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சலீல மூனசிங்க தொடர்பான குறித்த பண பரிமாற்ற சம்பவத்திற்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என லிட்ரோ நிறுவனம் நேற்றைய தினம் (10) அவிறித்திருந்தது. 
 
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் நிதி மோசடி விசாரணை பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...