Wednesday, April 17, 2024
Home » அமைச்சரவை மாற்றத்தால் பொதுஜன பெரமுன வருத்தம்

அமைச்சரவை மாற்றத்தால் பொதுஜன பெரமுன வருத்தம்

கட்சியின் செயலாளர் சாகர காரியவசம்

by damith
October 24, 2023 8:40 am 0 comment

அமைச்சரவை மாற்றம் காரணமாக பொதுஜன பெரமுன கட்சி தமது கவலையைத் தெரிவிப்பதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று அந்தக் கட்சி நடத்திய செய்தியாளர் மாநாட்டில் அதுதொடர்பில் குறிப்பிட்ட அவர், இந்த விடயத்தில் மேற்கொண்ட தீர்மானம் தவறானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கை யில், சுகாதார அமைச்சராக பதவி வகித்த கெஹலிய ரம்புக்வெ ல்லவுக்கு எதிராக பொய்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. பின்னர் அவை பொய்க் குற்றச்சாட்டு என்பது நிரூபிக்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி இத்தகைய சூழ்நிலையில் ஏதாவது ஒரு மாற்றத்தை கொண்டுவந்தால் நல்லது என்ற முடிவில் டாக்டரான ரமேஷ் பத்திரனவை சுகாதார அமைச்சராக நியமித்துள்ளார்.

எனினும் கட்சி என்ற ரீதியில் நாம் கவலையடைய வேண்டியுள்ளது. அது தொடர்பில் நாம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளோம்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கான பலத்தை பொதுஜன பெரமுன கட்சியே வழங்கி வருகிறது. அந்தக் கட்சியிலுள்ள உறுப்பினர்களே அதற்கான பலத்தை கொடுத்து வருகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஐந்து உறுப்பினர்களே உள்ளனர். எனினும் புதிதாக இராஜாங்க அமைச்சர் பதவியொன்றும் அக்கட்சிக் கு வழங்கியுள்ளதை ஏற்கமுடியாது. அது தவறானது. தவறுகளை தவறு என சுட்டிக்காட்டுவதில் நாம் ஒருபோதும் பயப்படப்போவதில்லை. ஜனாதிபதியென்றாலும் தவறு செய்தால் அது தவறுதான். அதைநாம் தவறு என்றே தெரிவிக்க விரும்புகின்றோம்.

ஜனாதிபதி அவ்வாறு செய்யாமல் இருந்திருக்க முடியும். அந்த செயற்பாட்டிற்காக நாம் கட்சியென்ற ரீதியில் எமது எதிர்ப்பைத் தெரிவிக்கிறோம் என்றும் அவர் குறிபபிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT