இலங்கையில் இனிமேல் இயற்கை அனர்த்த காலம் | தினகரன்

இலங்கையில் இனிமேல் இயற்கை அனர்த்த காலம்

மனிதன் இயற்கையுடன் ஒன்றித்து வாழும் போது பாதிப்புக்கள் வருவது குறைவு. ஆனால் இயற்கைக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற போது, இயற்கைச் சமநிலை குழப்பமடைந்து அனர்த்தங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும்.

இயற்கை அனர்த்தங்களை ஆன்மிக ரீதியாகவும் விஞ்ஞான ரீதியாகவும் நோக்கும் போது, பல ஆழமான விடங்களை அறியக் கூடியதாகவுள்ளது. உலகில் பாவச் செயல்கள் அதிகரிப்பதன் காரணமாக அனர்த்தங்கள் ஏற்படுகிறது என்பது சமயப் பெரியார்களின் கருத்து. எனவே மனிதன் மற்றவருக்குத் துன்பம் செய்யாமல் உதவி செய்து வாழ வேண்டும் என்பது இவர்களின் கருத்தாகும். ஆனால் விஞ்ஞானரீதியில் நோக்கும் மனித செயற்பாடுகளும் இயற்கைக் காரணிகளும்தான் அனர்த்தம் ஏற்படக் காரணம் என்று கூறப்படுகிறது..

இயற்கை அனர்த்தம் என்றால் என்ன?பௌதிகச் சூழல் மூலம் இற்கையாக மனிதனுக்கு கேடு விளைவிக்கும் வகையில் ஏற்படும் நிகழ்வுகளை இயற்கை அனர்த்தங்கள் என்பர். அதாவது மனிதனின் செயல்களினால் இயற்கைச் சூழலில் ஏற்படும் நிகழ்வுகள் இயற்கை அனர்த்தங்கள் எனப்படும்.

புவியியல் அமைப்பு, கால நிலைக் கோலங்கள், ஆகியவற்றிக்கேற்ப இயற்கை அனர்த்தங்கள் நிகழுகின்றன. எனினும் அவை எல்லா நாடுகளுக்கும் பொதுவானவை அல்ல. இவற்றுள் வரட்சி, வெள்ளம், சூறாவளி, நிலடுக்கம் போன்றவை பாரிய பிதேசத்தை ஒரேயடியாகப் பாதிக்கின்றன. எனினும் நிலச்சரிவு, எரிமலை, வெடித்தல், பனிமலை உடைந்து விழுதல், காட்டுத்தீ போன்ற அனர்த்தங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தும். இயற்கை அனர்த்தம்இடம்பெறும் முறைக்கேற்ப அவற்றை பின்வருமாறு வகைப்படுத்தலாம்.

(1) புவியியல் ரீதியான அனர்த்தங்கள்: புவி நடுக்கம், சுனாமி, எரிமலை வெடித்தல், நிலச்சரிவு

(2) காலநிலைமாற்றங்கள்:- சுழிக்காற்று ,வெள்ளம் ,மின்னல் தாக்கம்,வறட்சி பனிமலை உடைந்து விழுதல்

(3)உயிரியல் உபத்திரவங்கள்: தொற்றுநோய்கள் போன்றவையாகும்..

இயற்கை அனர்த்தங்களால் உலகின் பல நாடுகளில் எதிர்பாராத பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. இயற்கை அனர்த்கங்களினால் உயிர்களுக்கும் சொத்தக்களுக்கும் ஏற்படும் சேதங்கள் மிகப் பாரதூரமானவை.

மின்னல் தாக்கம், வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு, வரட்சி, சூறாவளி, சுனாமி, நிலநடுக்கம், பூகம்பம் போன்ற பல இயற்கை அனர்தங்களினால் உலக நாடுகள் பாதிக்கப்படுவதுடன் எமது நாடும் பாதிப்புக்குள்ளாகி வருவதை அறியக் கூடியதாகவுள்ளது. இயற்கை அனர்த்தங்களை இனங்கண்டு, அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவது என்பது மட்டுல்லாது அது தொடர்பாக மக்களுக்கு விழிப்பூட்டுவது ஊடகவியலாளரின் சமூகம் சார்ந்த பொறுப்பாகும். அந்த வகையில் சில இயற்கை அனர்த்தங்களை நோக்குவோம்.

மின்னல் தாக்கம்:

மின்னலில் 25000_ - 30000 அம்பியர் மின் உண்டு. மின்னலில் ஒரு சென்ரிமீற்றர் இடைவெளியில் கொண்டுள்ள அழுத்த வித்தியாசம் 10.000V ஆகும். மின்னலானது 30000 பாகை செல்சியஸ் வெப்பநிலையைக் கொண்டது. ஒளியின் வேகத்திலே மின்னல் பயணிக்கிறது.(3×108Ms-1) அதாவது ஒரு செக்கனில் மூன்று மில்லியன் மீற்றர் தூரத்தில் மின்னல் செல்கின்றது.

வானில் உருவாகும் மின்னல் நிலத்தை நோக்கிப் பாய்வதனாலேயே மின்னல் தாக்கம் ஏற்படுகிறது. மின்னல் பாய்வதனால் ஏற்படுகின்ற பாதிப்பை எதிர்வு கூறமுடியாதுள்ளது. மின்னல் தாக்கமானது மூன்று முறைகளில் அழிவை ஏற்படுத்தும்.

1) மின்னலின் நேரடித் தாக்கம்:

மின்னல் தாக்கத்தினால் நேரடியாக ஏற்படும் பாதிப்பு இதுவாகும். இதனால் குளிரூட்டி, கூரைபுகைபோக்கி, கட்டடங்களுக்கு வெளியிலுள்ள, வீட்டுக்கூரையிலுள்ள பொருட்கள், உயரமான உலோகப் பொருட்கள், மரப்பலகையால் செய்யப்பட்டபொருட்கள் என்பன மின்னலின் நேரடித் தாக்கத்திற்குள்ளாகும்.

02) மின்னலின் மறைமுகத்

தாக்கம்:

மின்னலால் உருவாகும் மின்னோட்டத்தில் இலத்திரனியல் பொருட்கள் பாதிப்படைகின்றன. உதாரணமாக தொலைபேசி, தொலைக்காட்சி, புகைப்படக்கருவி போன்ற பொருட்கள் மின்னலின் மறைமுகத்தாக்கத்திற்குள்ளாகின்றன.

03) மின்னலில் உருவாகும்

மின்காந்தப்புலத்தினால்

ஏற்படும் பாதிப்புக்கள்:

இந்தக் காந்தப்புலத்தினால் கட்டடத்தினுள் காணப்படும் கம்பிகளில் (கடத்திகளில்) மின்னோட்டம், மின்னழுத்தம் தோன்றுகிறது. இது கணனி போன்ற இலத்திரனியல் பாகங்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றது. உதாரணம் கொன்கிரீற் சுவர்களின் தூண்களிலுள்ள கம்பிகளினூடாக மின்பாயும் போது உருவாகும் காந்தப்புலம் காந்த நாடாக்கள் காந்தப் புலத்தட்டுகளில் (கணனியில்) உள்ளத கவல்களை அழித்து விடுகின்றது. மேலும் உயர்ந்த மரங்கள் கட்டடங்கள் அண்டனா மின்கம்பிகள் போன்வற்றிக்கு மின்னலினால் ஏற்படும் தாக்கம் அதிகமாகும். மின்னல் எப்போதும் குறைந்த தடைகளூடாகவே பயணிக்கிறது.

மனித உடலினூடாக மின்பாயும் போது உடலின் உட்புறத்தில் தடை அதிகமாவதன் காரணமாக ஒருவரின் தலையிலிருந்து பாதம் வரை தோலினூடாக மின்பாய்கிறது.இது பிளஸ்ஓவர் (மேற்பரப்புக் கடத்தல்) என்று அழைக்கப்படுகிறது. . இங்கு பெரிய மின்னோட்டம் உடலின் மேற்பரப்பினூடாக பயணிப்பதால் உடலின் உட்புறத்தினூடாக பயணிக்கும் மின்னலின் அளவானது குறைவடைகிது.

இதனால் உடலின் உட்புற உறுப்புகளுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவாகக் காணப்படுகின்றது. கட்டடத்திற்கோ அல்லது வீட்டிற்கோ மின்னல் தாக்கும் போது பாரிய மின்னோட்டம் தொலைபேசிக் கம்பிகளினூடாகச் செல்கிறது.

இச்சமயத்தில் யாராவது ஒருவர் தொலைபேசியை பாவித்தால் தொலைபேசியை பாவிக்கும் நபரின் தலையினூடாக மின்பாய்ந்து நரம்புத் தொகுதியை வெகுவாகப் பாதிக்கும்.

மின்னல் தாக்கம் இருக்கும் போது உயரமான மரங்களில் இருப்பது ஆபத்தானதாகும். மரம் 20% ஈரலிப்பையும், மனிதனின் உடல்65% ஈரலிப்பையும் கொண்டுள்ளன. மரத்தில் மின்னல் தாக்கும் போது மரத்தினூடாக வரும் மின் குறைந்த தடையினூடாகச் செல்லும் ஆகவே மரத்துடன் ஒருவர் தொடர்பாக விருப்பதால் அவரின் உடம்பில் மின்பாயும். மின்னல் தாக்கத்தின் போது முழுமையாக உலோகங்களால் செய்யப்பட்ட மூடிய வாகனத்தினுள் இருப்பதால் மின்னலில் இருந்து பாதுகாப்புப் பெறலாம்.

மின்தாக்ககதிலிருந்து பாதுகாப்பு

பெறும் வழிகள்:

*கட்டடம் வீடுகளில் மின்சுற்றுக்குரிய புவிக்கம்பிகள் உரியமுறையில் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.

*வீட்டிற்கு அருகாமையிலுள்ள மரங்களுக்குமிடையில் மின்சாரம் பாயக் கூடிய வயர்கள் பொருத்தப்பட்டிருந்தால், இணைக்கப்பட்டிருந்தால் அத்தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும்.

*மின்சார உபகரணங்களை பிரதான மின்சுற்றிலிருந்து துண்டித்து வைத்தல் வேண்டும்.

*தொலைக்காட்சிப் பெட்டியின் அண்டனாவை துண்டிப்பதுடன் அண்டனா கட்டப்பட்ட கம்பியை நேரடியாக புவியுடன் தொடுகையுற வைக்க வேண்டும்.

*)மின்னல் ஏற்படும் போது மின்சார உபகரணங்கள் குளிர்சாதனப்பெட்டி, மின்னழுத்தி ,தொலைக்காட்சி, வானொலி, இரும்பிக்கம்பிகள் என்பவற்றை இயலுமானஅளவு தொடுவதையும், கையாள்வதையும் தவிர்த்தல் வேண்டும்.

*மின்னலடிக்கும் போது திறந்தவெளியில் நிற்காமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மின்னல் ஏற்பட்டு15 செக்கனில் பின்னரே இடிமின்னல் ஒலி கேட்கும். எனவே விரைவாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

*திறந்தவெளிகளில் வயல், தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம், கடற்கரை போன்ற இடங்களில் சுற்றித்திரிவதைத் தவிர்த்தல் வேண்டும். திறந்தவெளியில் இருக்கும் போது குனிந்து இருத்தல் வேண்டும்.

*குனிந்திருப்பதன் மூலம்அல்லது படுப்பதன் மூலம் உடம்பின் உயரத்தைக் குறைக்க வேண்டும். *இரண்டு கால்களையும் சேர்த்து குந்தியிருத்தல் வேண்டும். இரும்பிலான தூண்கள், கட்டடங்கள் போன்றவற்றை தொடுதல், அருகில் இருப்பது தவிர்க்கப்படல்வெண்டும் , .

11)மின்னலின் போது கைத்தொலைபேசிப் பாவனயை தவிர்த்தல் வேண்டும்.

சூறாவளி:

இலங்கையில் ஒக்டோபர் மாதம் தொடக்கம் டிசம்பர் வரையிலான இடைப்பருவக் காற்று வீசும் காலப் பகுதிகளில்சூறாவளியின் தாக்கம் காணப்படுகிறது. வங்காளவிரிகுடாவில் ஏற்படும் தாழமுக்கம் இதற்குக் காரணமாக அமைகின்றது. டிசம்பர் மாதத்திலே அதிகமான சூறாவளித் தாக்கம் ஏற்படுவதாக அறியமுடிகிறது. சூறாவளியானது இடத்துக்கிடம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது .ஹரிக்கேன் ,சைகிளோன், தைபூன் என்ற பெயர்களில் அழைக்கப்படுகின்றது.

சூறாவளியின் தோற்றம் , வேகம், இயல்பு, பயணப் பாதை, என்பவற்றினைப் பொறுத்து அதன் பாதிப்புக்கள் காணப்படும். இந்தப் பாதிப்புக்கள் சாதாரண விளைவுகளிலிருந்து பாரதூரமான விளைவுகள் வரை காணப்படும். குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகளினூடாக சூறாவளி செல்லும் போது பலத்த உடமைச்சேதத்தையும், உயிர் இழப்புக்களையும் சூறாவளியானது ஏற்படுத்துகிறது.சூறாவளியின் காரணமாக கடும்மழை, கடும் வேகம் கொண்ட காற்று, வெள்ளப் பெருக்கு, ,கரையோரப் பகுதிகளில் கடல்அலை உட்புகுதல் போன்றன ஏற்படும். கடும் மழையின் காரணமாக மண்சரிவு ஏற்படக் கூடும்.

மேலும் மாசடைந்த நீரின் காரணமாக தொற்று நோய்கள் ஏற்படக் கூடும்.

சூறாவளியின் போது

மேற்கொள்ள வேண்டிய

பாதுகாப்பு முறைகள் வருமாறு:------

சகலவிதமான மின்சாரத் தொடர்பையும் துண்டித்தல்,கதவு யன்னல்களை விட்டுதுரமாக இருத்தல்,

மீன் பிடிப் படகுகளை நன்கு நங்கூரமிட்டு நிறுத்தி வைத்தல்,

உறுதியான பாதுகாப்பு பகுதியில் வாகனங்ளை நிறுத்தி வைத்தல்,

வெள்ளப்பெருக்கு:

வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் இரண்டு.

1) இயற்கைக்காரணிகள்

2) மனிதசெயற்பாடுகள்

இயற்கைக் காரணிகளைப் பொறுத்தமட்டில் மழைவீழ்ச்சி, பாறைகளின்அமைப்பு, வனத்தின் செறிவு ஆகியனவாகும்.

மனித செயற்பாடுகளைப் பொறுத்த வரை நீர்செல்லும் பாதைகளில் தடைகளை ஏற்படுத்தல்,

நீர்செல்லும் வடிகான்களை முறையாகப் பேணாமை,நீரைத் தேக்கி வைக்கக் கூடிய சதுப்புநிலங்கள் நிரப்பப்படல், நீர்வழிந்தோடும் இடங்களில் கழிவுகளை போடுதல்,தாழ்நிலங்கள் நிரப்பப்படல்,மக்களிடம் சட்திட்டங்கள் பற்றிய தெளிவின்மை,

போன்றனவாகும்.எனவே இவற்றைச் சீர்செய்வதன் மூலம் வெள்ளப்பெருக்கிலிருந் து பாதுகாப்பு பெறலாம்.

சுனாமி:

சமுத்திரம் மற்றும் கடலின்அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம் அல்லது மண்சரிவு அல்லது எரிகல் வெடிப்பு,விண்கற்கள் விழுதல் ஆகிய காரணங்களால் கடல் அலைகளில் ஏற்படுகின்ற குழப்பமான நிலை சுனாமி என்றுஅழைக்கப்படுகின்றது.

கடலுக்கடியில் அல்லது கடலுக்கருகே ஏற்படும் நிலநடுக்கம், நிலச்சரிவு அணுக்கருவெடிப்பு போன்றன சுனாமி ஏற்படுவதற்கு பிரதான காரரணிகளாகும்.நிலநடுக்கம் எனும் போது புவியோட்டிக்கு உட்புறமாகவுள்ள பாறை,படைகள் இரண்டுக்கு மத்தியில்ஏற்படும் அதிர்வுபுவிநடுக்கம் எனப்படும்.

சுனாமியினால் உடமைச் சேதம், உயிர்ச் சேதம், பொருளாதார ரீதியான பாதிப்பு, உளரீதியான பாதிப்பு என்பன ஏற்படுகின்றன.

இவ்வாறான அனர்த்தங்களிலிருந்து ஒவ்வொருவரும் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...