இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் ஊழல்; ICC விசாரணை | தினகரன்

இலங்கை கிரிக்கெட் விளையாட்டில் ஊழல்; ICC விசாரணை

 
இலங்கையின் கிரிக்கட் விளையாட்டில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படும் ஊழலை விசாரிப்பதற்கு, சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை முடிவு செய்துள்ளது.
 
இலங்கையின் கிரிக்கட் விளையாட்டு தொடர்பில், விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) உறுதிப்படுத்தியுள்ளது.
 
அதற்கமைய ICC ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததாக அது அறிவித்துள்ளது.
 
இலங்கை கிரிக்கெட் விளையாட்டு தொடர்பில் ஊழல் இடம்பெற்று வருவதாகவும் அதனை விசாரணை செய்யுமாறும் கோரி, இலங்கை கிரிக்கெட் வீரர்கள் 40 பேரினால், இலங்கை கிரிக்கெட் நிறுவத்தினடம் அண்மையில் முறைப்பாடொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது.
 
இலங்கை கிரிக்கட்துறையில் ஊழல்கள் இடம்பெறுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான தேவையொன்று காணப்படுவதாக, சர்வதேச கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் ஊழல் ஒழிப்பு பிரிவின் முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...