அர்ஜுன் மகேந்திரனிடம் இன்று குறுக்கு விசாரணை | தினகரன்

அர்ஜுன் மகேந்திரனிடம் இன்று குறுக்கு விசாரணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் இன்று பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் குறுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை, பிணைமுறி தொடர்பான குறிப்பிட்ட காலத்தில் அவர் உபயோகித்த இரண்டு கையடக்கத் தொலைபேசிகளின் தகவல்கள் இல்லாத 11 மாத காலம் சம்பந்தமான ஆவணங்களை இன்று 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஆணைக்குழு அர்ஜுன மகேந்திரனிடம் கோரியுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜையென்றும் அவர் இலங்கையில் பிணைமுறி மோசடி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் வாக்குமூலம் வழங்கவோ ஆணைக்குழுவுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கோ சட்டத்தில் இடமில்லையென அவருடைய சட்டத்தரணி மேற்படி ஆணைக்குழுவுக்கு தெரிவித்திருந்தார். எனினும் அர்ஜுன் மகேந்திரன் வெளிநாட்டுப் பிரஜையாக இருந்த போதும் இலங்கையின் சட்டங்களுக்கு அவர் உட்பட்டவர் என்றும் ஆணைக்குழு முன்னிலையில் அவர் சாட்சியமளிப்பது அவசியமென்றும் ஆணைக்குழு அறிவித்தது.

அவர் வெளிநாட்டில் வாழ்ந்தவர் என்றாலும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அவர் பதவியைப் பொறுப்பேற்றதன் பின்னர் அவர் இந்த நாட்டு சட்டத்திற்கு உட்பட்ட நபரென்றும் மேற்படி ஆணைக்குழு தெரிவித்தது.

இதற்கிணங்க இன்றைய தினம், ஆணைக்குழு அவரிடம் குறுக்கு விசாரணை செய்வதற்காக அழைத்துள்ளது.

அத்தோடு அவரது கையடக்க தொலைபேசிகளில் பதியப்படாத தகவல்களை இன்று நண்பகலுக்கு முன்னர் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...