Home » மின் கட்டணம் அறவிடும் 40 நாள் கால அவகாசம் நீடிக்க வேண்டும்

மின் கட்டணம் அறவிடும் 40 நாள் கால அவகாசம் நீடிக்க வேண்டும்

நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் அமைப்பு அரசிடம் வேண்டுகோள்

by damith
October 23, 2023 6:20 am 0 comment

மின் கட்டணம் வெகுவாக அதிகரித்துள்ள நிலையில் மின் பாவனையாளர்களின் நலன் கருதி மின் கட்டணத்தை செலுத்த தற்போது வழங்கப்படும் 40 நாட்களை மேலும் நீடிக்குமாறு நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு அரசாங்கத்தைக் கேட்டுள்ளது.

இந்த அமைப்பானது நேற்று இது தொடர்பில் ஊடகங்களுக்கான அறிப்பொன்றையும் விடுத்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு: இலங்கையில் 68 இலட்சம் மின் பாவனையாளர்கள் உள்ளனர். அந்தவகையில் இந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு தடவைகள் மின் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கிணங்க கடந்த வருடம் மாதாந்தம் 180 அலகு மின்சாரத்தை உபயோகிக்கும் நுகர்வோர் தமது மின் கட்ட்ணமாக 3755 ரூபாவை மாத்திரமே செலுத்தியுள்ளனர்.

எனினும் தற்போதைய மின்கட்டண அதிகரிப்பிற்கிணங்க, மாதாந்தம் 180 மின் அலகுகளை உபயோகிக்கும் மின் பாவனையாளர்கள் அந்த கட்டணத்தை 10,500 ரூபாவாக செலுத்த நேர்ந்துள்ளதாக இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இது பாரிய அதிகரிப்பாகக் காணப்பகிறது. பாவனையாளர்களின் வசதிகருதி மின் கட்டணத்தைச் செலுத்தும் காலத்தை மேலும் அதிகரிக்குமாறு கேட்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT