பொது இடங்களில் ​கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது? | தினகரன்

பொது இடங்களில் ​கட்டிப்பிடித்தால் காதலர்கள் கைது?

பொது இடங்களில் கட்டிப்பிடித்து காதலை வெளிப்படுத்தும் காதலர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ் செய்தியாளர்களிடம் கூறினார்.

இரு சக்கர வாகனம், கார், பூங்கா ஆகிய இடங்களில் காதலர்கள் கட்டிப்பிடித்து ஒருவரை ஒருவர் விழுங்குவது போல் பார்த்துக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

ஏதேனும் தவறு நடக்கும் முன்பாக அந்த ஜோடிகளை கைது செய்ய வேண்டும் என்றும் சிறையில் சிறையில் அடைக்க வேண்டியது அவசியம் என்றார்.

மேலும் பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் காதல் ஜோடிகளை பொதுமக்கள் பார்க்க மறுப்பதாக குறைகூறிய அவர் பாலியல் பலாத்காரம் நடந்தால் மட்டும் பொலிசாரை குற்றம் சொல்வதாகவும் சாக்ஷி மகாராஜ் தெரிவித்துள்ளார்.


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...