Thursday, April 25, 2024
Home » பொல./ கடுவன்வில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் திறந்து வைப்பு
ஆங்கிலம் மற்றும் கணித செயற்பாட்டு பிரிவு

பொல./ கடுவன்வில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் திறந்து வைப்பு

பிரதம அதிதியாக வடமத்திய மாகாண ஆளுநர் பங்கேற்பு

by damith
October 23, 2023 6:00 am 0 comment

பொலன்னறுவை திவுலாகல கல்வி வலயத்திற்குட்பட்ட கடுவன்வில முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 55 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆங்கிலம் மற்றும் கணித செயற்பாட்டு பிரிவு வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் மற்றும் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோரினால் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அந்த செயற்பாட்டு பிரிவை நிர்மாணிப்பதற்கு சாதாரண கல்வி நவீன வேலைத்திட்டத்தின் (கெம்ப்) கீழ் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் தற்போது தரம் 1 — 11 வரை 700 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

மேற்படி பாடசாலையில் பாரிய குறைபாடாகவிருந்த ஆங்கில மற்றும் கணித செயற்பாட்டு பிரிவு இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அந்த செயற்திட்டத்தின் மூலம் மாகாண பாடசாலைகளின் மேம்பட்ட கல்வித் தரத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும். இதன் போது மாகாண பிரதான செயலாளர் சந்திரசிறி பண்டார, மாகாண கல்வி மற்றும் பிதான அமைச்சின் செயலாளர் லக்ஷ்மி ஹேவாபதிரன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அநுராதபுரம் மேற்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT