அருந்திக பெனாண்டோ அமைச்சு பதவியிலிருந்து உடனடி நீக்கம் | தினகரன்

அருந்திக பெனாண்டோ அமைச்சு பதவியிலிருந்து உடனடி நீக்கம்

 
பிரதியமைச்சர் அருந்திக பெனாண்டோ, அவரது பிரதியமைச்சு பதவிகளிலிருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்டுள்ளார்.
 
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், அரசியலமைப்பின் 46 ஆவது சரத்தின் பிரிவு 3 (அ) இற்கு அமைய, ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்திற்கு அமைய அவர் இவ்வாறு பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான அருந்திக பெனாண்டோ, சுற்றுலா துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகார பிரதி அமைச்சராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...