Thursday, April 25, 2024
Home » UNHCR இந்தியாவின் புதிய தூதுவர் பிரதி உயர் ஸ்தானிகருடன் சந்திப்பு

UNHCR இந்தியாவின் புதிய தூதுவர் பிரதி உயர் ஸ்தானிகருடன் சந்திப்பு

by damith
October 23, 2023 9:57 am 0 comment

UNHCR இன் இந்தியாவிற்கான தூதுவராக அண்மையில் பதவியேற்ற திருமதி அரேட்டி சியானி, தென்னிந்தியாவிற்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி டி. வெங்கடேஷ்வரனை அண்மையில் நேரில் சந்தித்து கலந்துரையாடினர். இக்கலந்துரையாடலில் அகதிகளாக திரும்பியவர்களை அவர்களின் சொந்த சமூகத்துடன் மீண்டும் ஒருங்கிணைத்தல் மற்றும் இலங்கை அரசாங்கம், ஐ.நா அமைப்புக்கள் மற்றும் இலங்கையில் ஒத்துழைப்புடன் வழங்கக்கூடிய வாழ்வாதார உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தமிழ் நாட்டில் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்கள் தங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ சிறந்த மற்றும் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை அடைவதன் முக்கியத்துவத்தை பிரதி உயர்ஸ்தானிகர் இதன்போது விசேட கவனம் செலுத்தினார். இது சம்பந்தமாக, தமிழ் நாட்டில் புனர்வாழ்வு முகாம்களில் வசிக்கும் மீள்குடியேற்றப்பட்ட இலங்கையர்களுக்கு அனைத்து நாட்டு கடவுச்சீட்டுகளையும் (இலங்கை கடவுச்சீட்டுகள்) வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் பாராட்டத்தக்க கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அவர் UNHCR க்கு விளக்கினார்.

செல்வி. margriet Veenma, துணைத் தூதுவர், திரு. சச்சிதானந்த வளன், தென்னிந்தியாவில் UNHCR இன் கள அலுவலகத் தலைவர் மற்றும் துணை உயர் ஸ்தானிகராலயத்தின் அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT