கத்திகளை காட்டி அச்சுறுத்தியதால் மாணவர்கள் மயக்கம் | தினகரன்

கத்திகளை காட்டி அச்சுறுத்தியதால் மாணவர்கள் மயக்கம்

பாடசாலைக்கு சென்ற மாணவ,மாணவிகளை கறுப்பு ஆடைகளுடன் வழிமறித்த மர்ம நபர்கள் கத்திகளை காண்பித்து அச்சுறுத்தியதால் மயக்கமுற்ற 11 மாண வர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா கிலன்டில் லங்கா பிரிவில், நேற்றுக் (13)காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.பாடசாலைக்கு சென்ற மாணவிகளை வழியில் இடைமறித்த இனந்தெரியாத மர்மநபர்கள் இருவர், கத்திகளைக் காட்டி மிரட்டியதால், அம்மாணவிகள் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளனர்.

பின்னர் பிரதேச மக்களின் உதவியுடன் அவர்கள் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் எட்டு மாணவிகளும், மூன்று மாணவர்களுமாக பதினொரு பேர் பாதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹற்றன் சுழற்சி நிருபர் 

 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...