பாப்பரசருக்கு சிறு காயம் | தினகரன்

பாப்பரசருக்கு சிறு காயம்

கொலம்பியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசர் பிரான்ஸிஸ் தான் பயணிக்கும் வாகனத்தில் மோதியதால் சிறு காயத்திற்கு உள்ளானார்.

அவர் காயமடைந்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியானதை அடுத்து பாப்பரசரின் பேச்சாளர் ஒருவர் அந்த செய்தியை உறுதி செய்தார். பாப்பரசரின் கன்னம் மற்றும் புருவ பகுதிகளில் காயம் ஏற்பட்டதாகவும் ஐஸ் கட்டி கொண்டு சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டார்.

பாப்பரசர் குண்டு துளைக்காத கண்ணாடிகளைக் கொண்ட ஊர்வல வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாப்பரசர் கண்ணாடிக்கு வெளியில் சாயும்போது வாகனம் நிறுத்தப்பட்டதால் சமநிலை இழந்து அவரது முகம் கண்ணாடியில் மோதியுள்ளது. தனது காயத்திற்கு பிளாஸ்திரி போட்டுக் கொண்ட பாப்பரசர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆராதனைகளில் ஈடுபட்டார். இந்த நிகழ்வில் 500,000க்கும் அதிகமானோர் பங்கேற்றிருந்தனர். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...