கட்டுக்கெலிய அணி 9 ஓட்டங்களினால் வெற்றி | தினகரன்

கட்டுக்கெலிய அணி 9 ஓட்டங்களினால் வெற்றி

பலளுவெவ ரொலக்ஸ் விளையாட்டுக்கழகம் நடாத்திய அணிக்கு 11 பேர் கொண்ட 8 ஓவர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி இம்மாதம் 4,5,6,7,9 ஆம் திகதிகளில் பலளுவெவ பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.இதன் ஆரம்ப நிகழ்வுக்கு அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் கலந்து கொண்டார்.

இப்போட்டித் தொடர் லீக் முறையில் நடைபெற்றது.கெகிராவ பிரதேசத்திலுள்ள பிரபல கிரிக்கெட் அணிகள் 12 கலந்து கொண்டதுடன் இரு பிரிவுகளாக இடம்பெற்ற போட்டியில் ஒரு அரை இறுதிப் போட்டியில் நேகம நிவ் ஸ்டார் அணியும் பலளுவெவ ரொலக்ஸ் அணியும் போட்டியிட்டு நேகம நிவ் ஸ்டார் அணி 9 விக்கெட்டுக்களினால் இலகுவான வெற்றியை பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகினர்.

மற்றைய அரை இறுதிப்போட்டியில் அவுக்கன அணியும்,கட்டுகெலியாவ KCC அணியும் போட்டியிட்டது.இதில் வெற்றிபெற்ற கட்டுக்கெலியாவ KCC அணி இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றது.இதன் பின்னர் நேகம நிவ் ஸ்டார் அணியும் கட்டுக்கெலியாவ KCC அணியும்

இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர்.இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கட்டுக்கெலியாவ KCC அணி 8 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 61 ஓட்டங்களைப் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேகம நிவ் ஸ்டார் அணி 8 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 52 ஓட்டங்களை பெற்றனர்.

இதில் கட்டுக்கெலியா அணி 9 ஓட்டங்களினால் வெற்றி பெற்று ரொலக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர்.இறுதிப் போட்டியில் ஏ.ஆர்.எம்.டிரவல்ஸ் உரிமையாளரும் பிரபல தொழிலதிபருமான ஏ. ஆர். எம். தாரீக் மற்றும் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மானின் இணைப்புச் செயலாளர் ஜே. ஏ. ரஜாப்தீன் ஆகியோரும் கலந்து பரிசில்களையும் கிண்ணங்களையும் வழங்கி வைத்தனர்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...