CID யினால் தேடப்பட்ட அர்ஜுன் ஆணைக்குழுவில் ஆஜர் | தினகரன்

CID யினால் தேடப்பட்ட அர்ஜுன் ஆணைக்குழுவில் ஆஜர்

 
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் சர்ச்சைக்குரிய பிணை முறி விநியோகம் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
 
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் அங்கு ஆஜராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்ற விசாரணை பிரிவிற்கு (CID) ஆஜராகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவரை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என சட்டமா அதிபர் திணைக்களத்தினால், நேற்றைய தினம் (06) ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து, அவரை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முறி விசாரணை தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிட்டது.
 
பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ், சர்ச்சைக்குரிய முறி விற்பனை தொடர்பில் மத்திய வங்கியிலுள்ள இரகசியத் தகவல்களை, ஏலம் இடம்பெறும் தினத்தில் மிக தெளிவாக தெரிந்து வைத்திருந்தார் என ஆணைக்குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...