Thursday, March 28, 2024
Home » வட,கிழக்கில் முன்னெடுக்கப்படும் பொதுமுடக்கம்; பல சேவைகள் ஸ்தம்பிதம்

வட,கிழக்கில் முன்னெடுக்கப்படும் பொதுமுடக்கம்; பல சேவைகள் ஸ்தம்பிதம்

by Prashahini
October 20, 2023 12:12 pm 0 comment

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா மீதான அச்சுறுத்தலின் மூலம் நீதித்துறை சுயாதீனமாக செயற்பட முடியாத நிலமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல், செயற்பாடுகளிற்கு கண்டனம் தெரிவித்தும் இன்று (20) வடகிழக்கில் முன்னெடுக்கப்படும் ஹர்த்தால் போராட்டத்திற்கு முல்லைத்தீவில் முழுமையான ஆதரவு வழங்கப்பட்டது.

அந்தவகையில் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் நடமாட்டம் மிககுறைவாக காணப்பட்டது.

இதேவேளை அரச பேருந்து சேவைகள் வழமைபோல இடம்பெற்றிருந்ததுடன், தனியார் பேருந்துச்சேவைகள் ஸ்தம்பிதமடைந்திருந்ததன.

இதேவேளை பாடசாலைகளில் பரீட்சை இடம்பெற்று வருகின்றமையால் கல்விச்செயற்பாடுகள் வழமைபோல இடம்பெற்றிருந்தது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் இன்மையால் நகரத்தின் இயல்பான செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தது. இதேவேளை நீதிமன்ற செயற்பாடுகளில் இருந்து சட்டத்தரணிகள் பணிபகிஷ்கரிப்பு செய்திருந்தனர் .

மாவட்டத்தின் புறநகர்ப்பகுதிகளான முள்ளியவளை, ஒட்டுசுட்டான், புதுக்குடியிருப்பு, விசுவமடு, மாங்குளம் உட்பட ஏனைய உபநகரங்களின் வழமையான செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்திருந்ததுடன், வியாபார நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டுவரும் பொது முடக்கம் ஊடான எதிர்ப்புப் போராட்டத்திற்கு முல்லைத்தீவில் தமிழ், முஸ்லீம் மக்கள், சிவில் சமூக அமைப்புக்களும், மக்கள் பிரதிநிதிகளும் தமது முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றனர்.

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டத்திற்கு யாழ்ப்பாண நகரில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு பூரண ஆதரவை வழங்கின.

இதனால் யாழ்ப்பாண நகரம் முற்றாக முடங்கியது. தனியார் பேருந்து சேவை அனைத்தும் முடங்கின. இலங்கை போக்குவரத்து சபை பேருந்து அங்காங்கே சேவையில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது. தவணைப் பரீட்சைகள் காரணமாக பாடசாலைகள் இயங்கியதையும் அவதானிக்க முடிந்தது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து சேவைகளும் ஸ்தம்பிதம் அடைந்தன.

ஓமந்தை விஷேட நிருபர்
யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT