Wednesday, April 24, 2024
Home » வடக்கு, கிழக்கில் நாளை தேவையற்ற ஹர்த்தால்
புத்திஜீவிகள், கல்விமான்கள், சமூக ஆர்வலர்கள் விசனம்

வடக்கு, கிழக்கில் நாளை தேவையற்ற ஹர்த்தால்

மாணவர்கள், அன்றாட தொழிலாளர் அனைவருக்கும் பாதிப்பு

by gayan
October 19, 2023 6:02 am 0 comment

அன்றாட அலுவல்களில் ஈடுபடுமாறு கூட்டாக கோரிக்கை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தேவையற்ற ஹர்த்தால்களை நடத்தி பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களினதும், அன்றாடம் தொழில் புரிந்து தற்போதைய பொருளாதார சூழலில் தமது குடும்பங்களை காப்பாற்ற உழைக்கும் மக்களின் வாழ்வுடனும் விளையாட வேண்டாமென வடக்கு கிழக்கிலுள்ள புத்திஜீவிகள், சமயத் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவும் நீதவானாகவும் கடமையாற்றிய சரவணராஜா, தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருந்ததாக கூறி நாட்டை விட்டு வெளியேறிய சம்பவம் தொடர்பில் நாளை வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு தமிழ் கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன.

இது குறித்து ஊடகங்களுக்கு இவர்கள் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளனர்.

வடக்கு கிழக்கில் எதற்கு எடுத்தாலும் உடனடியாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து முழு கடையடைப்பு போராட்டத்தை நடத்துவதே தற்போதைய

வடக்கு, கிழக்கில் நாளை பொதுமுடக்கத்துக்கு…

தெரிவித்துள்ளன. யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலே, இக்கட்சிகள் இதனைத் தெரிவித்தன.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாடு சுதந்திரமடைந்து 75 வருடங்கள் கடந்தும்,தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றன.

போர் முடிந்து 14 வருடங்கள் கடந்துள்ளபோதும்,எமக்கு நீதி கிடைக்கவில்லை.இதையே கோரி நிற்கிறோம்.

வடக்கு,கிழக்கில் தமிழர்களின் பெரும்பான்மை பலத்தை சிதைக்கும் வகையிலான செயற்பாடுகளை அனுமதிக்க முடியாது.முல்லைத்தீவு,குருந்தூர்மலை,தையிட்டி மற்றும்

கன்னியா போன்ற தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களில் பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கு எதிராக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்புக்களும் மீறப்பட்டுள்ளன.குருந்தூர்மலை ஆலய வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி சரவணராஜாவும் அச்சுறுத்தலுக்கஞ்சி நாட்டை விட்டு வௌியேறியுள்ளார்.

திருகோணமலையில் இலுப்பைக்குளத்தில், விகாரை ஒன்றுக்கான முன் நடவடிக்கைகள், ஆளுநரின் கட்டளையையும் மீறி. மேற்கொள்ளப்பட்டுள்ளன.

காணிகள் மீளக் கையளிக்கப்படும் என்று அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை.

மயிலத்தை மடு மேய்ச்சல் காணிகளில்,பெரும்பான்மை இனத்தவர் குடியமர்த்தப்படுகின்றனர்.

இவ்வாறான அநீதிகளுக்கு நீதி கோரியும்,சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்க்கவுமே இந்த ஹர்த்தாலை ஏற்பாடு செய்துள்ளதாக எட்டு கட்சிகளும் கூட்டாக தெரிவித்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழ் ஈழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழ் மக்கள் கூட்டணி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி , ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் ஆகியன இணைந்து இந்த அறிக்கை வெளியிட்டுள்ளன

யாழ். மத்திய குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT