திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் பாரிய தீ | தினகரன்

திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் பாரிய தீ

 
மட்டக்களப்பு திருப்பெருந்துறை திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் இன்று (22) அதிகாலை 1.00 மணிமுதல் பாரிய தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக மட்டக்களப்புப் பொலிசார் தெரிவித்தனர்.
 
மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைப்புப் படையினர் மற்றும் பொலிசாரின் தண்ணீர் பீச்சியடிக்கும் வாகனங்கள மூலம் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனினும் தீயணைப்புக் இயந்திரத்திற்கான நீரை பவுசர்கள் மூலம் வெளியிடத்திலிருந்து கொண்டு வந்து நிரப்பப்பட்டு தீயணைப்பதினால் தீயைக் கட்டுப்படுத்துவது சிரமமான பணியாக உள்ளதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்தனர்.
 
 
எரிந்து கொண்டிருக்கும் கழிவினுள் அஸ்பெஸ்டோஸ் கூரை சீற்றுக்களும் உள்ளதனால் அவை பாரிய சத்தத்துடன் வெடிப்பதும் கட்டுப்படுத்துவதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றது, எனினும் தீயை முழுமையாகக் கட்டுப்படுத்த இரண்டு அல்லது மூன்று நாட்கள் செல்லும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
 
 
மட்டக்களப்பு மாநகரசபையினால் முகாமைத்துவம் செய்யப்படும் குறித்த நிலையத்தில் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு கூட்டுப்பசளை உற்பத்தி செய்யும் நிலையமும் இயங்கி வரும் நிலையில் தீப்பிடிப்பதற்கான காரணங்களைக் கண்டறிவதில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
 
குறித்த பிரதேசத்தில் சேகரிக்கப்பட்டுள்ள குப்பைகளிலிருந்து வெளிவரும் துர்நாற்றம் மற்றும் தூசிகள் காற்றில் பரவுவதனால் ஏற்படும் சுவாச நோய்கள் காரணமாக பிரதேச மக்கள் இம்முகாமைத்துவத்தினால் தங்களின் சுகாதாரத்திற்கு கேடாக உள்ளதினால் கழிவுகளை இவ்விடத்தில் இருந்து அகற்றுமாறு கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்களைச் செய்திருந்தனர்.
 
 
சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு பிரதிப் பொலிஸ்மா அதிபர் யாக்கொட ஆராய்ச்சி, மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் யட்டவர மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வி. தவராஜா ஆகியோர் விஜயம் செய்து தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்
 
(மட்டக்களப்பு விசேட நிருபர் - சிவம் பாக்கியநாதன்)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...