நீர்கொழும்பு பெரியமுல்லவில் கொங்கிரீட் இடிந்து விபத்து (VIDEO) | தினகரன்

நீர்கொழும்பு பெரியமுல்லவில் கொங்கிரீட் இடிந்து விபத்து (VIDEO)

 
நீர்கொழும்பு, பெரியமுல்ல பகுதியில் ஹோட்டல் ஒன்றின் நிர்மாணப் பணியின் போது இடம்பெற்ற விபத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
நீர்கொழும்பு, பெரியமுல்ல பாலத்திற்கு அருகிலுள்ள இரு மாடிகளைக் கொண்ட ஹோட்டல் ஒன்றில் மூன்றாவது மாடிக்காக கொங்கிரீட் தட்டு இடப்பட்ட நிலையில் அது உடைந்து வீழ்ந்துள்ளது.
 
இதனையடுத்து, குறித்த தளத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேர் கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து உடனடியாக மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
அதனையடுத்து, மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கைகளை அடுத்து மேலும் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
மீட்பு நடவடிக்கை தொடர்ந்து  இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
 

Add new comment

Or log in with...