நடிகர் அல்வா வாசு உடல்நிலை கவலைக்கிடம் | தினகரன்

நடிகர் அல்வா வாசு உடல்நிலை கவலைக்கிடம்

'அமைதிப்படை' படத்தில் சத்யராஜிற்கு அல்வா வாங்கிக் கொடுக்கும் கெரக்டரில் நடித்து அதன்மூலம் அல்வா வாசு எனப் பிரபலமானவர் நடிகர் வாசு. இவர் வடிவேலுவுடன் சேர்ந்து பல படங்களில் கொமெடி செய்து நம்மை சிரிக்கவைத்தவர்.

தமிழில் 900 படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து பிரபலமான இவர், இயக்குநர் மணிவண்ணனிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.

கடந்த ஆறு மாதங்களாக, கல்லீரல் பாதிப்பால் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைபெற்றுவந்தார்.

அல்வா வாசுவின் மனைவி அமுதாவிடம், ‘அவருக்கு சிகிச்சை பலன் அளிக்கவில்லை, விரைவில் உயிர் பிரிந்துவிடும்.

அதனால் அவரை வீட்டுக்கு அழைத்து செல்லலாம்’ என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். இவர்களுக்கு கிருஷ்ண ஜெயந்திக்கா என்ற மகள் உள்ளார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...