3rd Test - Day 02 - STUMPS: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 333 ரன்கள் அவசியம் (UPDATE)

 
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் பல்லேகலவில் இடம்பெறும், 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி துடுப்பாட்டத்தில் தடுமாற்றத்தை எதிர்நோக்கியுள்ளது.
 
அந்த வகையில், இந்திய அணியின் முதல் இன்னிங்சை தொடர்ந்து, பகல் போசன இடைவேளைக்குப் பின் தனது முதல் இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
 
இலங்கை அணி சார்பில் லக்சான் சந்தகனின் பந்துவீச்சு பெறுதியாக 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. குறித்த ஓட்ட எண்ணிக்கையிலும் பார்க்க, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சிற்காக ஓரிரு  ஓட்டங்களையே அதிகமாக பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து Follow On முறைக்கு அமைய, இலங்கை அணியை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடருமாறு இந்திய அணியினால் பணிக்கப்பட்டது.
 
அந்த வகையில் இன்றைய ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸிற்காக ஒரு விக்கெட் இழப்புக்கு 19 ஓட்டங்களை பெற்றது.
 
இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க, இன்னும் 3 நாட்கள் மீதமுள்ள நிலையில் 333 ஓட்டங்களை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை 135/10 (முதல் இன்னிங்ஸ்)
தினேஷ் சந்திமால் 48
நிரோஷன் திக்வெல்ல 29
 
குல்தீப் யாதவ் 4/40
 
இலங்கை 19/1 (இரண்டாவது இன்னிங்ஸ்)
 
திமுத் கருணாரத்ன 12*
உபுல் தரங்க 07
மலிந்த புஷ்பகுமார 0*
 
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றது.
 
 

3rd Test - Day 02: இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 487/10 (UPDATE) (பி.ப. 1.34)

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் பல்லேகலைவில் இடம்பெறும், 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 487 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், தற்போது சகல விக்கெட்டுகளையம் இழந்து தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்துள்ளது.
 
இந்தியா 487/10 (122.3
 
சிக்கர் தவான் 119
ஹார்டிக் பாண்ட்யா 108
லோகேஸ் ராகுல் 85
 
இலங்கை அணி சார்பில்
லக்‌ஷான் சந்தகன் 5/132
மலிந்த புஷ்பகுமார 3/82
 
 

இந்திய அணி 329/6; இன்று இரண்டாம் நாள் (மு.ப. 08:07)

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் கண்டி பல்லேகலையில் இடம்பெறும், 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 329 ஓட்டங்களை பெற்றுள்ளது.
 
இந்திய அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 119 ஓட்டங்களையும், லோகேஸ் ராகுல் 85 ஓட்டங்களையும் அதிக பட்சமாக பெற்று கொடுத்து ஆட்டமிழந்தனர்.
 
ஒரு கட்டத்தில் 188 ஓட்டங்களுக்கு எவ்வித விக்கெட்டுகளையும் இழக்காதிருந்த இந்திய அணியின் விக்கெட்டுகள் இலங்கை அணியின் பந்துவீச்சில் சரிய ஆரம்பித்தன.
 
ஷிகர் தவான் 119
லோகேஸ் ராகுல் 85
விராத் கோலி 42
 
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில்
மலிந்த புஷ்பகுமார 3/40
லக்‌ஷான் சந்தகன் 2/84
 
மூன்று போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-0 என இந்திய அணி வெற்றி பெற்று தொடரை தன்வசமாக்கிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...