STF மீது சூடு; பதில் தாக்குதல்; நால்வர் கைது

 
நீர்கொழும்பு குரண சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கும் குழு ஒன்றுக்கும் இடையில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று  இடம்பெற்றுள்ளது.
 
நேற்று (12) பிற்கபலில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், இரு சந்தேகநபர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மேலும் இருவரை பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
 
பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவொலின்றிற்கு அமைய, வேன் ஒன்றை சோதனையிட்ட வேளையில், குறித்த வேனிலிருந்தவர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
 
 
பதிலுக்கு STF இனால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் சந்தேகநபர்கள் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
 
பின்னர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த அதிரடிப்படையினர், குறித்த நபர்கள் வந்த வேனை கைப்பற்றியதோடு, அதிலிருந்து ரி56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் கைத்துப்பாக்கி ஒன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
 
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டோர் விபரம்:
1. பத்திரண சம்பிக குமார ஜயதுங்க (28) - பியகம
(ராகமை வைத்தியசாலையில் அனுமதி)
2. வஜிர குமார (41) - சீதுவ
(கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி)
3. ஜனக அருண சாந்த (40) - தெல்தெனிய
(இராணுவ சேவையிலிருந்து தப்பியவர்)
4. தரிந்து மதுஷ (31) - ராகமை
 
இதன்போதே குறித்த பிரதேசத்தில் பதற்ற நிலை ஏற்பட்டதோடு, ஒரு சில மணித்தியாலங்களுக்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...