கியூபாவில் அமெரிக்க தூதரக பணியாளர்களிடம் மர்ம அறிகுறி

கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரக பணியாளர்களின் உடலில் மர்மமான அறிகுறிகள் தோன்றியதை அடுத்து அமெரிக்கா இரு கியூப இராஜதந்திரிகளை வெளியேற்றியுள்ளது.

அமெரிக்க தூதரக பணியாளர்களுக்கு என்ன ஆனது என்பது உறுதிப்படுத்தப்படாத போதும் உடல் கோளாறுகளுக்கான காரணம் பற்றி விடை தேட வேண்டி இருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

சில தூதரக பணியாளர்கள் செவித்திறனை இழந்திருப்பதாக அமெரிக்க அரச அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.

இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தப்படுவதாக கியூப வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது. தமது தூதரக பணியாளர்கள் வெளியேற்றப்பட்டது நியாயப்படுத்த முடியாதது என்றபோதும் என்ன நடந்தது என்பது குறித்து கண்டறிய அமெரிக்காவோடு ஒத்துழைப்புடன் செயற்படப்போவதாக கியூபா குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க இராஜதந்திரிகளின் வீட்டுக்கு வெளியில் வைக்கப்பட்ட ஒருவகை ஒலி சாதன உபகரணம் காது கோளாமல் போவதற்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த சாதனம் செவிக்கு புலப்படாத ஒலி அலைகளை உமிழ்வது காதுகோளாமையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...