அக்கரைப்பற்று ஹிஜ்றா சம்பியன் | தினகரன்

அக்கரைப்பற்று ஹிஜ்றா சம்பியன்

அக்கரைப்பற்று மெற்றீக்ஸ் விளையாட்டுக் கழத்தின் ஏற்பாட்டில் மெகா மெற்றீக்ஸ் வெற்றிக்கிண்ண மென்பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக் கழகத்தினர் சம்பியனாகியுள்ளது.

சிரேஷ்ட வீரர் முஸ்தபா நிஹால் தலைமையில் மட்டுப்படுத்தப்பட்ட 5 ஓவர் 7பேர் கொண்டதாக நடைபெற்ற இச் சுற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சுமார் 20 முன்னணி விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றின.

அக்கரைப்பற்று பொதுவிளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை(05) மாலை 4.30 மணிக்கு இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.

இறுதிப் போட்டிக்கு அக்கரைப்பற்று லீஸ்டார் விளையாட்டுக் கழகமும் அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டுக் கழகமும் தெரிவு செய்யப்பட்டன.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற லீ ஸ்டார் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 5 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஹிஜ்றா கழகத்தினர் 4 ஓவர்களில் 3 விக்கட்களை இழந்த 45 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றனர்.

இதன்மூலம் 4 விக்கட்களினால் ஹிஜ்றா விளையாட்டுக் கழகத்தினர் வெற்றி பெற்று சம்பியனாகியது.

இதன் போது சம்பியனான அக்கரைப்பற்று ஹிஜ்றா விளையாட்டு கழகதின் தலைவரிடம் வெற்றிக்கிண்ணத்துடன 15 ஆயிரம் ரூபா காசோலையினை நிகழ்வின் பிரதம அதிதி சட்டத்தரணி டாக்டர் கே.எம்.சமீம் வழங்கி வைத்தார். இரண்டாமிடம் அக்கரைப்பற்று லீஸ்டார் விளையாட்டக் கழகத்தின் தலைவரிடம் கிண்ணத்துடன் 07 ஆயிரம் ரூபா காசோலையினை நிகழ்வின் கௌரவ அதிதி எம்.ஸாத் வழங்கி வைத்தார்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...