வட மத். மாகாண சபையில் குழப்பம்; ஒழுங்கு பத்திரத்துக்கு தீ | தினகரன்

வட மத். மாகாண சபையில் குழப்பம்; ஒழுங்கு பத்திரத்துக்கு தீ

 
வட மத்திய மாகாண சபையின் புதிய தவிசாளர் டீ.எம். அமரதுங்கவின் நியமனத்திற்கு எதிர்ப்பு வெளியிட்டு இன்றைய அவை ஒழுங்கு பத்திரத்துக்கு (நிகழ்ச்சி நிரலுக்கு) தீ வைத்தனர்.
 
ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குறித்த நடவடிக்கை காரணமாக, இன்றைய சபை அமர்வில் குழப்ப நிலை ஏற்பட்டது.
 
 
குறிந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேசர்ந்த 14 உறுப்பினர்களும், கறுப்பு பட்டி அணிந்து சபை அமர்வில் பங்கேற்றதோடு, அமர்வின் ஆரம்பத்திலேயே புதிய தவிசாளரின் நியமனத்துக்கு முன்னாள் சுகாதார அமைச்சர் கே.எச். நந்தசேன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
 
 
அதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் அனில் ரத்நாயக்க, குறித்த நியமனம், சபையின் அனுமதிக்கு அமையவே இடம்பெற்றதாக தெரிவித்தார்.
 
இதையடுத்து, சபையின் மத்திய பகுதிக்குச் சென்ற ஒன்றிணைந்த எதிரணி உறுப்பினர்கள், சபையின் இன்றைய ஒழுங்கு பத்திரத்துக்கு தீ வைத்துள்ளனர்.
 
இதையடுத்து, அவர்கள் சபையிலிருந்து வெளியேறியனர், ஆயினும் இன்றைய சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 
(படங்கள்: அநுராதபுரம் மத்திய குறூப் நிருபர் - அமில் பிரபாத் வனசிங்க)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...