மாணவர் ஒன்றிய அழைப்பாளருக்கு பாரிய நிபந்தனைகளுடன் பிணை | தினகரன்

மாணவர் ஒன்றிய அழைப்பாளருக்கு பாரிய நிபந்தனைகளுடன் பிணை

 
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் லஹிரு வீரசேகர பாரிய நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
 
கடந்த ஜூன் 21 ஆம் திகதி, சுகாதார அமைச்சிற்குள் அத்துமீறி நுழைந்து அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
இதன்போது, ரூபா 09 இலட்சத்திற்கும் அதிக பெறுமதி கொண்ட சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டதாக அரச கணக்காய்வு திணைக்களம் மதீப்பீடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
குறித்த வழக்கு இன்று (09) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதவான் அவருக்கு பிணையில் செல்ல அனுமதித்தார்.
 
பிணை நிபந்தனைகளை மீறக்கூடாது என எச்சரிக்கப்பட்ட அவர், அவ்வாறு பிணை விதிகள் மீறப்படும் பட்சத்தில், வழக்கு முடியும் வரை விளக்கமறியலில் விதிக்கப்படும் என நீதவான் உத்தரவிட்டார்.
 
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வன்முறைகளில் ஈடுபடுதல், போன்ற விடயங்களில் ஈடுபடக்கூடாது எனும் நிபந்தனைகளை விதித்து பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
 
ஏற்கனவே இடம்பெற்ற மாணவர்களின் பல்வேறு போராட்டங்கள் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்ட அவர், பிணை விதிகளை மீறிய நிலையிலேயே கடந்த முறையும் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழக ஒன்றிய பிக்கு மாணவர் சங்கத்தின் அழைப்பாளர் டெப்பிட்டியே சுகதானந்த தேரர், நேற்றைய தினம் (08) பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...