மரை வேட்டை; சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

 
தலவாக்கலை கிரேட்வெஸ்டன் மலைத்தோட்டத்தில் மரையை வேட்டையாடிய சந்தேக நபர்களை, கைதுசெய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
 
மலைத் தோட்ட வனப்பகுதியிலிருந்து தோட்ட பகுதிக்கு இரைத்தேடி வந்த மரையொன்று வேட்டையாடப்பட்டுள்ளதுடன் அதனை வெட்டி இறைச்சியாக்க முயன்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
 
 
இன்று (03) இது தொடர்பில் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு பொலிஸார் சென்றுள்னர்.
 
இதனையடுத்து, மரையை வேட்டையாடிய நபர்கள், பொலிஸார் வருவதை கண்டு, மரையை அவ்விடத்திலே விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
 
 
பொலிஸார் மரையை மீட்டு வனப்பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு, சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
 
வேட்டையாடப்பட்ட மரை, சுமார் 150 இற்கும் மேற்பட்ட எடையுடையது என பொலிஸார் தெரிவித்தனர்.
 
(ஹட்டன் சுழற்சி நிருபர் - கே. கிரிஷாந்தன்)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...