1st Test-Day 04: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி (UPDATE) | தினகரன்

1st Test-Day 04: இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி (UPDATE)

 
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் காலியில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
 
550 எனும் பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மேலும் ஒரு நாள் மீதமிருக்கும் நிலையில் 245 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
 
இதன் மூலம் இந்திய அணி 304 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
 
திமுத் கருணாரத்ன 97
நிரோஷன் திக்வெல்ல 67
 
ரவிச்சந்திரன் அஸ்வின் 3/65
ரவீந்திர ஜடேஜா 3/71
 
இந்தியா 600/10 & 240/3d
இலங்கை 291/9 & 245/8
 

1st Test-Day 04: இலங்கைக்கு 550 எனும் இமாலய இலக்கு (UPDATE)

550 எனும் பாரிய வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி, மதிய போசன இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை இழந்து 85ஓட்டங்களை பெற்றுள்ளது.

 
இன்று (29) நான்காவது நாள் என்பதோடு, நாளை ஒரு நாள் மீதுமுள்ள நிலையில் இலங்கை அணி வெற்றி பெறுவதற்கு 8 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் மேலும் 465 ஓட்டங்கள் பெற வேண்டியுள்ளது.
 
ஆட்டமிழந்தோர்
உபுல் தரங்க 10 (10)
தனுஷ்க குணதிலக 02 (08)  
 
திமுத் கருணாரத்ன 44*
குசல் மெண்டிஸ் 24*
 
முதலாவது டெஸ்ட் - காலி
இந்தியா 600 & 240/d
இலங்கை 291 & 85/2

1st Test-Day 04: இலங்கைக்கு 550 எனும் இமாலய இலக்கு

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணிக்கு 550 ஓட்டங்கள் எனும் இமாலய வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
நேற்றைய (28) ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழற்பிற்கு 189 ஓட்டங்களை பெற்றிருந்தது.
 
நேற்றைய தினம் ஆட்டமிழக்காமல் ஆடுகளத்திலிருந்த இந்திய அணியின் தலைவர் கோலி (76*), இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்ததோடு, தனது 17 ஆவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
 
இதனையடுத்து, 240 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இந்திய அணி தனது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
 
விராத் கோலி 103 (136)*
அஜிங்யா ரஹானே 23 (18)*
 
முதலாவது டெஸ்ட் - காலி
இந்தியா 600 & 240/d
இலங்கை 291
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...