Saturday, April 20, 2024
Home » எரிபொருள் கையிருப்பை பாதுகாக்க அரசு திட்டம்
இஸ்ரேல் – காஸா போர் உக்கிரம்

எரிபொருள் கையிருப்பை பாதுகாக்க அரசு திட்டம்

ஜனாதிபதியின் அறிவுறுத்தலில் நடவடிக்கை

by damith
October 16, 2023 6:20 am 0 comment

காஸா பகுதியில் இடம்பெற்றுவரும் போரால் உலக சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதன் காரணமாக, நாட்டில் எரிபொருள் கையிருப்புக்களை பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இது தொடர்பில் அண்மையில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாகவும், இதன்படி தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புக்களை சிறப்பான முகாமைத்துவ முறைக்கு கீழ்ப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர், நாட்டில் தற்போதுள்ள எரிபொருள் கையிருப்புக்களை பாதுகாப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவெடுப்பதற்காக எரிசக்தி அமைச்சும் இலங்கை பெற்றோலிய பொற்றோலிய கூட்டுத்தாபனமும் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளன.

மீண்டும் எரிபொருள் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் முன்னைய QR குறியீட்டு முறைமை மீள ஆரம்பிக்கப்படுவதா? அல்லது வேறு நிர்வகிக்கப்பட்ட விநியோக முறைமையை நடைமுறைப்படுத்துவதா? என்பதை தீர்மானிக்கவே இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக குறிப்பிடப்படுகின்றது.

எவ்வாறாயினும் தற்போது எரிபொருள் தொடர்பில் எவ்வித பிரச்சினையும் ஏற்படவில்லை எனவும், எதிர்காலத்தில் ஏதேனும் நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அதற்கான திட்டத்தை தயாரிக்குமாறும் அரசாங்கம் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.

சினோபெக் சீன எரிபொருள் நிறுவனமும் இலங்கையில் வெற்றிகரமாக இயங்கி வருவதால் எதிர்காலத்தில் எவ்வித நெருக்கடியுமின்றி எரிபொருள் விநியோகத்தை தொடர முடியுமென இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பூகோள நிலைமைகளின் தாக்கத்தினால் ஏதேனும் நெருக்கடி நிலை உருவாகும் பட்சத்தில், முன்னறிவிப்பின் பின்னர் அது தொடர்பான முகாமைத்துவ முறைகள் வெளியிடப்பட உள்ளதாக கூட்டுத்தாபனம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT