Saturday, April 20, 2024
Home » நாகப்பட்டினம் – KKS பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

நாகப்பட்டினம் – KKS பயணிகள் கப்பல் சேவை ஆரம்பம்

by damith
October 16, 2023 5:42 am 0 comment

தமிழகத்தின் நாகப்பட்டினத்துக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை உத்தியோகபூர்வமாக சனிக்கிழமை ஆரம்பமானது. சுமார் 12.20 மணியளவில் காங்கேசன்துறையை கப்பல் வந்தடைந்தது. வரவேற்பு நிகழ்வில் கப்பல்துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் பாரா ளுமன்ற உறுப்பினர்கள் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டு கப்பலில் வந்த பயணிகளை வரவேற்றனர். காங்கேசனிலிருந்து மதியம் 1.20 மணியளவில் மீண்டும் நாகபட்டினம் நோக்கி 31 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த கப்பலை இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் கொடி அசைத்து வழியனுப்பி வைத்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT