Home » பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம்

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம்

by damith
October 16, 2023 8:31 am 0 comment

பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 92வது பிறந்தநாளை(அக்டோபர் 13, 2023) முன்னிட்டு கான்சல் ஜெனரல் ராகேஷ் நடராஜ் யாழ்.பொது நூலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். யாழ் மாநகர ஆணையாளர்

ஜெயசீலன், பிரதம நூலகர், நூலக அதிகாரிகள் மற்றும் துணைத் தூதரக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

யாழ்.பொது நூலகத்தில் கலாநிதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின்

மார்பளவு சிலையை நிறுவியதற்காக இந்திய அரசாங்கத் திற்கு நன்றி தெரிவித்த யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், இது யாழ்ப்பாணத்தின் பெருமை என்றும்

குறிப்பிட்டார். டாக்டர் கலாமின் யாழ்ப்பாணத்துடனான தொடர்புகள் குறித்து பேசிய அவர், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் அவரது முயற்சிகள் சந்திரயான்-3

ஏவுவதன் மூலம் விண்வெளித் துறையில் அதன் மிகப்பெரிய சாதனைக்கு இந்தியாவை இட்டுச் சென்றது என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய கான்சல் ஜெனரல், முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தனது சாதனைகளுக்காக புத்தகங்கள் மீதான அவரது அன்பு

எவ்வாறு ஒரு உத்வேகமாக செயல்பட்டது என்றும் இது தாழ்மையான தொடக்கத்தில் இருந்து அவரை பெரிய உயரத்திற்குக் கொண்டு சென்றது என்பதை அடிக்கோடிட்டுக்

காட்டினார். எந்த மொழியாக இருந்தாலும் வாசிக்கும் பழக்கத்தை ஒவ்வொரு இளைஞர்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், வடமாகாண இளைஞர் களிடையே வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் எதிர்காலத்தில் யாழ்.பொது நூலகத்துடன் இணைந்து நிகழ்வுகள் நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டார். தேசிய வாசிப்பு மாதத்தின் ஒரு அங்கமாக யாழ் பொது நூலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காட்சியகத்தையும் பார்வையிட்ட கொன்சல் ஜெனரல், இலங்கையின் வரலாற்று கலாசாரம் மற்றும் பாரம்பரியம் பற்றிய பன்முகப் பார்வையை காட்சிப்படுத்தியதாக தெரிவித்தார். 15 அக்டோபர், 2023பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாமின் 92வது பிறந்தநாள் கொண்டாட்டம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT