Thursday, March 28, 2024
Home » மரம் முறிந்து வீழ்ந்ததில் மலையக புகையிரத சேவைகளுக்கு தடை

மரம் முறிந்து வீழ்ந்ததில் மலையக புகையிரத சேவைகளுக்கு தடை

by Rizwan Segu Mohideen
October 15, 2023 4:03 pm 0 comment

மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வட்டவளை மற்றும் கலபட புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரத பாதையில் பாரிய மரம் ஒன்று வீழ்ந்துள்ளதால் மலையக புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இன்று (15) பிற்பகல் புகையிரத மரமொன்று இவ்வாறு புகையிரத பாதையில் வீழ்ந்ததால் மரத்தை வெட்டி அகற்ற முடியாத நிலையில், மு.ப. 8.30 மணியளவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே கடுகதி புகையிரதம் கலபடை புகையிரத நிலையத்தில் பிற்பகல் 1.00 மணிக்கு நிறுத்தப்பட்டுள்ளது.

புகையிரதப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவரும் வகையில், மரத்தை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT