Friday, March 29, 2024
Home » ‘image expo 2023’ கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி

‘image expo 2023’ கண்காட்சியை பார்வையிட்ட ஜனாதிபதி

- பிரபல புகைப்பட, வீடியோ உபகரணம் மற்றும் தொழில்நுட்ப வர்த்தகநாமங்களின் கண்காட்சி

by Rizwan Segu Mohideen
October 15, 2023 11:34 am 0 comment

– BMICH இல் இடம்பெறும் கண்காட்சியின் இறுதி நாள் இன்று

CameraLK நிறுவனத்தினால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘image expo 2023’ கண்காட்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற் (14) பார்வையிட்டார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) இடம்பெற்ற ‘image expo 2023’ கண்காட்சி, தொழில்சார் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த புகைப்படம் மற்றும் வீடியோ ஆர்வலர்களுக்கு உவும் வகையில், உலகின் முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்தியது.

இதன்போது Sony நிறுவனத்தின் வர்த்தகநாம பிரதிநிதிகளான, புகைப்பட கலைஞர் திமித்ரி குரூஸ் மற்றும், திலிண களுதொட்டகே ஆகியோருக்கு ஜனாதிபதியால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அதனையடுத்து விருதுபெற்ற வன உயிரியல் ஆர்வ புகைப்பட கலைஞரான லக்‌ஷித கருணாரத்னவால், வன உயிரியில் புகைப்பட தொகுப்பொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்விற்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், CameraLK நிறுவனத்தால் ஜனாதிபதி ஊடகப் பிரிவிற்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கெமரா ஒன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது.

‘image expo 2023’ கண்காட்சி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமானதோடு, இன்று (15) நிறைவடைய உள்ளது.

இந்நிகழ்வில் CameraLK நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனுஷ்க குணசிங்க, Sony நிறுவனத்தின் பிராந்திய சந்தைப்படுத்தல் மேம்பாட்டு மையத்தின் சந்தைப்படுத்தல் பிரதானி ஸ்டென்லி டேன் (Stanley Tan), வர்த்தக பிரதானி யெப் யெங் (Yap yung), DJI சிரேஷ்ட சந்தைப்படுத்தல் முகாமையாளர் ப்னை ச்சேங் (Fly Chang), அதன் பிரதிநிதி கன்வல்ஜீத் சிங், உலகின் முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT