பிக் போஸ் 21 ஆம் நாள்: ஆர்த்தி வெளியேற்றம் | தினகரன்

பிக் போஸ் 21 ஆம் நாள்: ஆர்த்தி வெளியேற்றம்

பிக் போஸ் வீட்டிலிருந்து ஆர்த்தி வெளியேற்றம்

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டுள்ளார். 
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து உடல் நலக்குறைவு காரணமாக முதலில் ஸ்ரீ வெளியேறினார். அனுயா மற்றும் கஞ்சா கருப்பு ஆகியோர் அடுத்தடுத்து எலிமினேட் செய்யப்பட்டனர்.
 
பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றதால் பரணி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அடுத்த இப்பொது ஒருவர் வௌியேற்றப்பட்டுள்ளார்.
 
வையாபுரி, ஆர்த்தி, ஜூலி ஆகிய மூவர் எலிமினேஷன் லிஸ்டில் இருந்தனர். 
 
ஆர்த்தியை வெளியில அனுப்புங்க ப்ளீஸ் அப்போ தான் அடுத்த எபிசோட் பாப்போம் என்று பலர் கருத்து ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கருத்து தெரிவித்து வந்தனர்.
 
முதலில் நடிகர் வையாபுரி வெளியேற மாட்டார் என முதலிலேயே அறிவித்துவிட்டார்கள். 
 
பிறகு, ஜூலி மற்றும் ஆர்த்தியிடம் உங்களுடைய பெட்டியை எடுத்து வாருங்கள் என்று தனித்தனியாக கூறினார் நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கமல்ஹாசன்.
 
பிறகு, ஆர்த்தி மற்றும் ஜூலியை வைத்து பரப்பான உரையாடல் நடத்தப்பட்டது. 
 
இதில், இருவரும் பல கருத்துக்களை தெரிவித்து கொண்டனர். பிறகு, எதிர்பாராத திருப்பமாக இரண்டு பேரையும் வெளியேற்ற போகிறோம். 
 
நீங்கள் வெளியேற்றப்பட்டால் என்ன செய்வீர்களோ அதை இப்போது செய்யுங்கள் என்று கூறினார் கமலஹாசன்.
 
வழக்கம் போல இருவரும், பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவரையும் கட்டி பிடித்து கதறிஅழுதனர். 
 
இருவரும், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே செல்லும் கதவிற்கு அவர்களுடைய உடைமைகள் அடங்கிய பெட்டியை தூக்கி கொண்டு சென்றனர்.
 
இறுதியாக நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டதாக அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.
 
 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...