டெங்கு தீவிரம்; 230 பேர் மரணம்; 84,073 பேர் பாதிப்பு

 
நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தற்போது கிழக்கு மாகாணத்தில் பருவமழை பொழிய ஆரம்பித்துள்ளதனால் டெங்கு பரவும் சாத்தியம் அதிகமுள்ளதாகவும், பொது மக்கள் அவதானம் முன்னெச்சரிக்கையுடன் தொழிற்பட வேண்டுமெனவும்  அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
நாடளாவிய ரீதியில் மக்களை பெரிதும் அச்சுறுத்திவரும் டெங்கு நோய்த்தாக்கத்திற்கு ஜூலை 11ஆம் திகதிவரை மொத்தம்  230 பேர் பலியாகியுள்ளனர். 84073 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தகவல் தெரிவிக்கின்றது.
 
மேல் மாகாணத்தில் அதிகூடிய 36165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் கொழும்பு மாவட்டத்தில் சுமார் 19,234 பேர் அடங்குகின்றனர். கொழும்பு மாநகர சபை பிரதேசங்களில் மாத்திரம் 3,445 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கம்பஹா மாவட்டத்தில் இரண்டாவது கூடிய தொகை 12,267 நோயாளர்களும், குருநாகல் மாவட்டத்தில் 5,065 பேரும், மூன்றாவது தொகை நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில்  நான்காவது 4,664 டெங்கு நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
அனைத்துப் பிரதேசங்களிலும் டெங்கு ஒழிப்பு துப்புரவுப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. குடியிருப்பு வீடுகள் மாத்திரமன்றி, அரச, தனியார் அலுவலகங்கள் பாடசாலைகள், பொது இடங்கள் என்பனவற்றிலும் டெங்கு ஒழிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன..
 
டெங்கு ஒழிப்பு துப்புரவுப் பணிகளில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், உத்தியோகத்தர்களுடன் அரச உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பொலிஸ் மற்றும் பொதுமக்கள், பொது நிறுவனங்கள் என்பனவும் இப்பணிக்கு நிறைவான ஒத்துழைப்பு நல்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பிரதேச செயலகங்கள்,  உள்ளுராட்சி சபைகள் என்பனவும் நிறைவான ஒத்துழைப்பு நல்கி வருகின்றன.
 
டெங்கின் இரண்டாவது வைரஸ் தற்காலத்தில் மக்களை தாக்கிவருவதாக கண்டறியப்பட்டுள்ளது. வயதுஇ பால்இ பிரதேசம்இ மொழி வேறுபாடுகளின்றி தாக்கி மரணத்தை எற்படுத்தும் கொhடிய டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் மிகவும் அவதானம்இ முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும்இ குடியிருப்பு வீடுகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை துப்புரவாகப் பராமரிக்க வேண்டும் எனவும் சுகாதார வைத்திய அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
 
காய்ச்சல் ஏற்பட்டவுடன் அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் அல்லது தரமான வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமென மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 
அத்துடன், சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமடையாது நீடிக்குமானால் முறையான இரத்தப்பரிசோதனை அவசியமெனவும் மேலும் வலியுறுத்தப்படுகின்றது. டெங்கு தொடர்பில் அலட்சியம் வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.
 
(அட்டாளைச்சேனை மத்திய நிருபர் - ஐ.எல்.எம். றிஷான்)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...