கதிர்காம யாத்திரை; கல்முனையில் இருந்து உகந்தைக்கு பஸ் சேவை | தினகரன்

கதிர்காம யாத்திரை; கல்முனையில் இருந்து உகந்தைக்கு பஸ் சேவை

 
கதிர்காமத்திற்குச் செல்லும் பாதயாத்திரிகளின் நலனைக் கருத்தில் கொண்டு கல்முனை இலங்கை போக்குவரத்துச் சபையின் ஏற்பாட்டில் நேற்று  (15) முதல் உகந்தை முருகன் ஆலயத்திற்கு பஸ்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை சாலை முகாமையாளர் வி. ஜௌபர் தெரிவித்தார்.
 
இது குறித்து அவர் நேற்று (15) தெரிவிக்கையில்  இன்று (15) முதல் நாள் என்பதனால்  ஒருதடவை மாத்திரம்  பஸ் சேவை ஆரம்பித்து இருந்ததாகவும் இன்றிலிருந்து நாள்தோறும் இரண்டு பஸ்கள் சேவையில் ஈடுபடவுள்ளது.
 
அதன் அடிப்படையில், முதலாவது பஸ்  காலை  6.15 மணிக்கும் இரண்டாவது பஸ்  காலை 7.30 மணிக்கும் கல்முனை சாலையில் இருந்து புறப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
இதே வேளை கல்முனை சாலையில் பிரயாணிகளின் நலன் கருதி ஆசனப் பதிவுகள் இடம்பெற்றுவதாக மேலும் தெரிவித்தார்
 
(காரைதீவு குறூப்  நிருபர் - சகா)
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...