ஏர்வினின் அபார 151 ஓட்டங்களுடன் சிம்பாப்வே அணி 344/8 ஓட்டங்கள் | தினகரன்

ஏர்வினின் அபார 151 ஓட்டங்களுடன் சிம்பாப்வே அணி 344/8 ஓட்டங்கள்

சிம்பாப்வே அணியின் கிரேக் ஏர்வினின் அபார சதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்ஸிற்காக ஆடிய அவ் அணி 08 விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களை குவித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று ஆரம்பமான டெஸ்ட் ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணியின் தலைவர் கிரீமர் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தற்கு அமைய அவ்வணியின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக மஸகட்ஷா -சக்கபாவா இருவரும் களமிங்கினர்.இருவரும் நிதானமாக ஆடுவார்கள் என்ற நிலையில் சகபாவா 12 ஓட்டங்கள் பெற்ற நிலையில் ரங்கன ஹேரத்தின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் ஆட்டமிழந்தார்.

பின்னர் மஸகட்சாவுடன் இணைந்தார் முஸகன்டா களமிங்கினர்.அவரும் வந்த வேகத்தில் 6 ஓட்டங்கள் பெற்ற நிலையில் குமாரவின் பந்தில் ஆட்டமிழந்தார்.பின்னர் ஏர்வின் களமிங்கினார், அவருடன் மறுமுனையில் இருந்த மஸகன்டா அட்டமிழந்தார்.அவர் 19 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் வில்லியம்ஸ் -ஏர்வின் ஜோடி ஆடுவார்கள் என்ற நிலையில் வில்லியம்ஸ் 22 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் ஏர்வினுடன் களமிறங்கினார் சிக்கந்தர் ராசா இரு வரும் சிம்பாப்வே அணிக்கு சிறந்த அடித்தளம் இட்டு 5 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 84 ஓட்டங்கள் பெற்ற போது சிக்கந்தர் ராசா 36 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.அவ்வணியின் விக்கெட் காப்பாளர் மூர் 19 ஓட்டங்களையும் வோலர் 36 ஓட்டங்களையும் கிரீமர் 13 ஓட்டங்களையும் பெற்றனர் .ஏர்வின் 60-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ஒரு ஓட்டங்கள் எடுத்து, தனது 2-வது சதத்தை பூர்த்தி செய்தார். அவர் 146 பந்தில் 9 பவுண்டரி், 1 சிக்சருடன் சதம் அடித்தார்.

இவர் ஏற்கனவே நியூசிலாந்திற்கு எதிராக சொந்த மண்ணில் முதல் சதத்தை பதிவு செய்திருந்தார்.பின்னர் 9 ஆவது விக்கெட்டுக்காக ஏர்வினுடன் இணைந்த திரிபானோ இருவரும் 9 ஆவது விக்கெடுக்காக இருவரும் நிதானமாகவும் அதிரடியாகவும் ஆடி

முறையே 151 ஓட்டங்களையும் 20 ஓட்டங்களையும் பெற்று களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர் அவர்கள் இருவரும் 9 ஆவது விக்கெட் இணைப்பாட்டமாக 62 ஓட்டங்கள் குவித்துள்ளனர்.அவ்வணி 90 ஓவர்கள் நிறைவில் 344 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக ரங்கன ஹேரத் 4 விக்கெட்டுகளையும் அசேல குணரத்தன இரண்டுவிக்கெட்டுகளையும் குமார ,டில்ருவன் பெரேரா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர்.

இன்று போட்டியின் இரண்டாவது நாளாகும்.

ஏ.ஆர்.பரீத் 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...