Home » சிறுவர் மத்தியில் பரவும் கண் நோய் – 05 நாட்கள் தொடரின் மருத்துவரை நாடவும்

சிறுவர் மத்தியில் பரவும் கண் நோய் – 05 நாட்கள் தொடரின் மருத்துவரை நாடவும்

சுகாதாரத்துறை பெற்றோருக்கு அறிவுறுத்து

by sachintha
October 13, 2023 7:19 am 0 comment

கொழும்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுவர்கள் மத்தியில் ஒருவித கண் நோய் பரவி வரும் நிலையில், ஐந்து நாட்களுக்கு மேல் அதற்கான அறிகுறிகள் நீடிக்குமானால் உடனடியாக மருத்துவரை நாடுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.இது தொடர்பில் சுகாதாரத்துறை தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாக கொழும்பு மாநகர சிரேஷ்ட சுகாதார மருத்துவ அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேற்கு, வடக்கு, மத்திய பகுதிகள் மற்றும் பொரளை உள்ளிட்ட பகுதிகளிலும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் இந்நோய் அதிகமாக பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஐந்து நாட்களுக்கு மேல் சிறுவர்களிடத்தில் இந்நோய்க்கான அறிகுறி காணப்படுமாயின் உடனடியாக அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறு அவர், பெற்றோர்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

அடிக்கடி கைகளை சுத்தம் செய்தல், கண்களைத் தொடுவதை தவிர்த்தல் போன்ற சுகாதார ஆலோசனைகளை முறையாகப் பின்பற்றி, இந்த கண் நோயை தவிர்த்துக் கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT