விளையாட்டு உபகரணங்கள் வழங்கல் | தினகரன்

விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் விவகார தொழில் வாய்ப்புத்துறை இணைப்பாளரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று உதைபந்தாட்ட லீக்கின் தலைவருமான ஏ.எல்.தவத்தின் நிதியொதிக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட

விளையாட்டு உபகரணங்கள் வழங்ம் சாய்நதமருது பௌஸி மைதானத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிளேன்ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவத்தின் 40 ஆயிரம் ரூபா நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட கடின பந்து கிரிக்கெட் உபகரணங்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டன.

இதில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது தவத்தின் உன்னத சேவையைப் பாராட்டி இக்கழகத் தலைவர் ஐ.எல்.ஏ.மஜீத் மற்றும் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் ஏ.வசீர் ஆகியோர்களால் நினைவுச்சின்னம் மற்றும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்) 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...