மூன்று கணவர்களை கொன்ற மூதாட்டி நீதிமன்றில் ஒப்புதல்

தனது மூன்று கணவர்மாரை கொலைசெய்து நான்காமவரை கொலை செய்ய முயன்றதை ஜப்பானிய மூதாட்டி ஒருவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

70 வயதான சிசகோ ககெஹி என்ற அந்த மூதாட்டி 2014 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில் கியோடோவில் கடந்த மாதம் அவர் மீதான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.

தனது கணவர் பொருளாதார ரீதியில் தன்னை சரியாக கவனிக்கவில்லை என்பதால் அவர் மீது நஞ்சூட்ட சயனைட்டை பெற்றதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆண்களின் பணத்தை இலக்கு வைத்து அவர்கள் அனைவருக்கும் ககெஹி சயனைட் ஊட்டி இருப்பதாக அரச வழக்கறிஞர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.

ககெஹியின் நான்காவது கணவர் திருமணம் முடித்து ஒரு மாதத்தின் பின் கடந்த 2013 டிசம்பரில் மரணமடைந்ததை அடுத்தே அவர் மீதான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. பிரேத பரிசோதனையில் அவரது உடலில் சயனைட் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ககெஹி 2007–2013 காலப்பகுதியில் தனது மூன்று கணவர்மாரை கொலை செய்தது மற்றும் ஒருவரை கொல்ல முயற்சித்தது குறித்த வழக்கு விசாரணைக்கு முகம்கொடுத்துள்ளார். 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...