டிஜிபூட்டியில் சீனாவின் முதல் வெளிநாட்டு இராணுவத் தளம் | தினகரன்

டிஜிபூட்டியில் சீனாவின் முதல் வெளிநாட்டு இராணுவத் தளம்

டிஜிபூட்டியில் அமைக்கப்படும் சீனாவின் முதலாவது வெளிநாட்டு இராணுவத் தளத்திற்கு சீன துருப்புகள் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த இராணுவத் தளம் ஆபிரிக்க மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் மனிதாபிமான உதவிகள் மற்றும் அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று சீனா குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் இராணுவ ஒத்துழைப்புகள், கடற்படை ஒத்திகைகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கும் இந்த இராணுவத் தளம் பயன்படுத்தப்படும் என்று சீன அரச ஊடகமான ஷின்ஹுவா குறிப்பிட்டுள்ளது.

ஆபிரிக்காவில் சீனா தனது முதலீடுகளை அதிகரித்திருப்பதோடு தனது இராணுவத்தையும் வேகமாக நவீனப்படுத்தி வருகிறது. துருப்புகளை ஏற்றிய கப்பல்கள் சீனாவின் தெற்கு குவங்டொன் மாகாணத்தின் சான்ஜியாங் துறைமுக நகரில் இருந்து பயணத்தை ஆரம்பித்ததாக ஷின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் டிஜிபூட்டிக்கு எத்தனை கப்பல்கள் மற்றும் துருப்புகள் செல்கின்றன என்பது குறித்தும், இராணுவ தளத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் விபரம் குறித்தும் சீனா எந்த தகவலையும் வெளியிடவில்லை.

எனினும் இந்த இராணுவ தளத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. 


Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...