Friday, March 29, 2024
Home » 3 கோடி ரூபா பெறுமதியான 17 மெ.தொ. உளுந்து தருவிப்பு
கடலை இறக்குமதியென தெரிவித்து

3 கோடி ரூபா பெறுமதியான 17 மெ.தொ. உளுந்து தருவிப்பு

-படம் : ரஞ்சித் அசங்க

by sachintha
October 13, 2023 6:13 am 0 comment

கொள்கலனுடன் மடக்கிப் பிடிப்பு

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள மூன்று கோடி ரூபா பெறுமதியான உழுந்து சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள 17 மெற்றிக் தொன் உழுந்தை சுங்க வருமான கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளரும் சுங்கப் பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.

. கடலை இறக்குமதி செய்யப்பட்டுள்ள கொள்கலன்களில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டு இந்த உளுந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதன் பெறுமதி 31 மில்லியன் ரூபா என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உளுந்து சுங்கத்தினால் விடுவிக்கப்பட்டு சந்தைக்கு சென்றிருந்தால் அதன் மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வரி வருமானம் 5 . 1 மில்லியன் ரூபா இழக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உளுந்து இறக்குமதிக்கு நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த உளுந்து இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. உளுந்து அடங்கிய இக்கொள்கலன் தற்போது ஊறுகொடவத்தை ஆர். சி. டி பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT