தன்னை தாக்கியதாக மெய்ப்பாதுகாவலர் மீது மங்களாராமய விகாராதிபதி முறைப்பாடு | தினகரன்

தன்னை தாக்கியதாக மெய்ப்பாதுகாவலர் மீது மங்களாராமய விகாராதிபதி முறைப்பாடு

 
தனது மெய்ப்பாதுகாவலர் தன்னை தாக்கியதாக அம்பிட்டிய சுமணரத்தின தேரோ பொலிசில் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார். 
 
மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரருக்கும் அவரது மெய்ப்பாதுகாவலரான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் இடையில் அம்பாறையிலுள்ள மங்களகம விகாரையில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை (07) வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும், இதன் போது குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தன்னை தாக்கியதாக அம்பிட்டிய சுமணரத்தின தேரேர் அம்பாறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
 
இதையடுத்து, யசரத்ன எனும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் சனிக்கிழமை (08) முதல் சேவையிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இந்தச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேரரின் மெய்ப்பாதுகாவலர்களாக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர் - எம்.எஸ். நூர்தீன்)
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...