இந்தியாவுடனான ரி20யில் மே.இந்திய தீவுகள் அபார வெற்றி | தினகரன்

இந்தியாவுடனான ரி20யில் மே.இந்திய தீவுகள் அபார வெற்றி

 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இ்டையிலான இருபதுக்கு20 போட்டியில் எவின் லீவிஸின் அபார சதத்தினால் மேற்கிந்திய தீவுகள் அணி 9 விக்கெட்களால் இந்தியாவை வென்றுள்ளது.
 
மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றுள்ள இந்திய அணி, 5 ஒருநாள், ஒரு சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியது.
 
அந்த வகையில் நேற்று (09) ஜமைக்காவின் உள்ள கிங்ஸ்டன் மைதானத்தில் ரி20 போட்டி இடம்பெற்றது.
 
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகளின் அணித்தலைவர் கார்லஸ் பிராத்வைட், இந்தியாவை முதலில் துடுப்பெடுத்தாட அழைப்பு விடுத்தார்.
 
இதற்கமைய களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இந்திய அணி சார்பில் 
தினேஷ் கார்த்திக் 48
விராட் கோலி 38
ரிஷாப் பன்ட் 38 
 
ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.
 
மேற்கிந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜெரோமி டெய்லர், வில்லியம்ஸ் தலா 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தனர்.
 
191 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி தனது இன்னிங்ஸை ஆரம்பித்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
 
ஆயினும் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய எவின் லீவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சதம் அடித்த அவர் 62 பந்துகளில் 125  ஓட்டங்களை பெற்று அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன்போது 12 ஆறு ஓட்டங்கள் மற்றும் 6 நான்கு ஓட்டங்களை அவர் அணிக்காக பெற்றிருந்தார்.
 
சாமுவேல்ஸ் 36*
 
அந்த வகையில் மேற்கிந்திய தீவுகள் அணி 18.3 ஒரே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 194 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது.
 
போட்டியின் ஆட்டநாயகனாக எவின் லீவிஸ் தெரிவுச்செய்யப்பட்டார்.
 
5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய அணி 3-1 எனக் கைப்பற்றியிருந்ததோட, முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸை இந்திய அணி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் மழையின் குறுக்கீடால் போட்டி இடைநிறுத்தப்பட்டதோடு, அப்போட்டி முடிவின்றி நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 

Add new comment

CAPTCHA
This question is for testing whether or not you are a human visitor and to prevent automated spam submissions.
Image CAPTCHA
Enter the characters shown in the image.

Or log in with...