Wednesday, April 24, 2024
Home » அனைத்துத்துறை மாணவருக்கும் உயர்கல்விக்காக சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு

அனைத்துத்துறை மாணவருக்கும் உயர்கல்விக்காக சவூதி அரேபிய பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு

by sachintha
October 13, 2023 1:04 pm 0 comment

பல நூறு இலங்கை மாணவர்கள் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் கல்வி பயில கிடைத்த வாய்ப்பு

கல்வித்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வரும் சவூதி அரேபியா வெளிநாட்டு மாணவர்களுக்கு பல வருடங்களாக உயர்கல்விக்காக புலமைப் பரிசில்களை வழங்கி வருகிறது. கல்வி முறையில் நவீன காலத்திற்கு ஏற்ப பல முன்னேற்றகரமான திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

இந்த வகையில் உலகின் எப்பாகத்தில் இருந்தும் மாணவர்கள் சவுதி அரேபியா சென்று உயர்கல்வியைத் தொடர்வதற்கு சவுதி அரேபியா முழுமையான புலமைப்பரிசில்களை வழங்கி வருகிறது. கடந்த காலங்களில் ஒரு சில பல்கலைக்கழகங்கள் மாத்திரமே வெளிநாட்டவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்கின.

தற்போது மக்கா மதீனா, ரியாத், அப்ஹா, ஜாஸான் போன்ற அனைத்து நகரங்களிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் உயர்கல்விக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் இஸ்லாமிய கற்கைநெறிகளில் மாத்திரம் அதிகளவு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன. தற்போது தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் போன்ற அனைத்துத் துறைகளிலும் உயர்கல்வியைத் தொடர்வதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

Study in Saudi Arabia என்ற திட்டத்தின் கீழ் கட்டணம் செலுத்தியும் புலமைப்பரிசில்கள் மூலமும் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் உள்வாங்கப்படுகின்றனர். பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியிருக்கும் எமது நாட்டில் உள்ள திறமையான மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியை தொடர்வதற்கு இது ஓர் அரிய சந்தர்ப்பமாகும்.

தற்போதும் இலங்கையின் பல பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் பூரண புலமைப்பரிசில் பெற்று கற்றுக் கொண்டிருக்கிறார்கள். தான் விரும்பிய மூன்று பல்கலைக்கழகங்களைத் தெரிவு செய்து விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்கும் முறை இணைய தளம் மூலம் இலகுபடுத்தப்பட்டுள்ளது. சவுதி அரேபியா உலகளாவிய ரீதியில் கல்விக்கான உதவிகளை வழங்கி வருகிறது. அண்மையில் தாஜிகிஸ்தான் நாட்டின் 19 அரசாங்கப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் நடைபெற்றது. சவுதியின் 2030 நோக்கங்களில் கல்வித்துறையை மேம்படுத்தும் வேலைத்திட்டம் முக்கிய இடத்தை வகிக்கிறது.

கொவிட் 19 இற்குப் பிறகு கல்வித்துறையில் பல சவால்களை எதிர்கொண்ட நாடுகளில் சவுதி அரேபியா விரைவாக மீண்டு வந்துள்ளது. பல நாடுகளிலும் சவுதி அரேபியா தமது மனிதாபிமான உதவிகளை வழங்கிக் கொண்டே இருக்கிறது. கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு சவுதி அரேபியா போன்ற நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்வது சிறந்ததாகும்.

அஷ்ஷெய்க் பௌஸுல் அலவி…

செயலாளர், தாருள் இமான் நிறுவனம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT