Saturday, April 20, 2024
Home » 2012 க்கு பின்னர் தோன்றும் அதிசய சூரிய கிரகணம்

2012 க்கு பின்னர் தோன்றும் அதிசய சூரிய கிரகணம்

இலங்கை, இந்தியாவுக்கு தென்பட வாய்ப்பில்லை

by gayan
October 12, 2023 9:30 am 0 comment

2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் எதிர்வரும் சனிக்கிழமை அதிசய சூரிய கிரகணம் தோன்றவுள்ளது. இந்த அதிசய நிகழ்வைக் காண வானியலாளர்கள் ஆவலாய் உள்ளனர். இம்மாதம் சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் தோன்றவுள்ளமை தொடர்பான விபரங்கள் வெளிவந்துள்ளன.

வானியல், ஆன்மீகம் மற்றும் ராசி பலன்கள் ரீதியில் இந்த 02 நாட்களும் முக்கியத்துவம் வாய்ந்தவையென தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும்14 ஆம் திகதி சனிக்கிழமையன்று சூரியனுக்கும் பூமிக்குமிடையே சந்திரன் வரவுள்ளது. இதன்போது சூரிய கதிர்களை சந்திரன் மறைக்கும்.இதனாலே சூரிய கிரகணம் ஏற்படும். இந்நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும். இந்த அற்புதமான காட்சியை பார்க்க வானியல் ஆர்வலர்கள் ஆர்வமாய் உள்ளனர். 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தற்போது தோன்றவுள்ள சூரிய கிரகணத்தின் வளையம், அளவில் பெரியதாக இருக்குமென்று வானியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். சனிக்கிழமை ஏற்படவுள்ள இந்நிழ்வை அமெரிக்காவில் எளிதாக பார்க்க முடியும். ஆனால் இந்தியா , இலங்கை போன்ற நாடுகளில் இந்த அரிய காட்சியை பார்க்கும் வாய்ப்பு குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT