Thursday, March 28, 2024
Home » படகை கைவிட்டு தப்பி ஓடிய இலங்கையர் இருவர் கைது

படகை கைவிட்டு தப்பி ஓடிய இலங்கையர் இருவர் கைது

மண்டபம் பகுதியில் தமிழக பொலிஸார் அதிரடி

by gayan
October 12, 2023 7:02 am 0 comment

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே முனைக்காடு கடற்கரை பகுதியில் செவ்வாய்க்கிழமை (10) சந்தேகத்துக்கிடமாக இலங்கை கண்ணாடியிழை படகை கைவிட்டு, மர்ம நபர்கள் இருவர் தப்பி ஓடியதாக அப்பகுதி மீனவர்கள் பொலிஸாருக்கு

தகவல் வழங்கியுள்ளனர். இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற பொலஸார் இலங்கை படகை மீட்டு கடத்தல் காரர்கள் யாரேனும் வந்துள்ளனரா? அல்லது சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.படகிலிருந்து 02 பேர் மிக விரைவாக தப்பித்துச் சென்றதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

படகு மற்றும் வெளிஇணைப்பு இயந்திரம் (எஞ்சின்) ஆகியவற்றை கைவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்ற பகுதி தங்கம், கஞ்சா உள்ளிட்டவை கடத்தல் நடைபெறும் பகுதியாக உள்ளதால் வந்தவர்கள் கடத்தல் காரர்களாக இருக்கக்கூடுமெனபைாலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை படகில் வந்த தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இலங்கை மன்னார் பகுதியை சேர்ந்த ஜெகன், நாகேந்திரன் என தெரிவந்துள்ளது.

நாடு முழுவதும் கடலோர மாநிலங்களில் ‘சாஹர் கவாச்’ என்னும் தீவிரவாத தடுப்பு மற்றும் கடலோர பாதுகாப்பு ஒத்திகை இன்று அதிகாலை தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.இந்நிலையில், ராமேஸ்வரம் அருகே, மண்டபம் முணைக்காடு கடற்கரை பகுதிக்கு நேற்று அதிகாலை 04 மணியளவில் இலங்கையைச் சேர்ந்த கண்ணாடி இழை படகு ஒன்று வந்தது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டபம் கரையோர போலீசார் படகை மீட்டு சோதனை செய்தனர். படகில் இன்ஜின், டீசல் கேன், பெட்டியில் சிறிது மீன்கள் இருந்தன.இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ‘கைப்பற்றப்பட்ட இலங்கை படகு இன்று அதிகாலை ராமேஸ்வரம் ஓலைக்குடா நரிக்குழி பகுதியில் உள்ள கலங்கரை விளக்கம் வழியாக மண்டபம் கடல்பகுதிக்கு சென்றது தெரிய வந்தது. இது இலங்கை பள்ளிமுனையை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான படகு என்பதும், படகில் வந்த இருவர் கடற்கரையோரத்தில் இருக்கும் முள் காட்டுக்குள் சென்று தலைமறைவானதும் தெரிய வந்தது.

 

மன்னார் குறூப் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT