Friday, March 29, 2024
Home » திட்டம் தீட்டி வெளிநாடு சென்றுள்ள நீதிபதி
லோரன்ஸ் செல்வநாயகம்

திட்டம் தீட்டி வெளிநாடு சென்றுள்ள நீதிபதி

மனைவி உட்பட 12 பேரிடம் வாக்குமூலம்

by gayan
October 12, 2023 7:11 am 0 comment

பொலிஸ் மற்றும் CID விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் கசிவு

முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு எந்தவித உயிர் அச்சுறுத்தலோ அல்லது வேறு அச்சுறுத்தல்களோ கிடையாதென்றும் அவர் முன்னேற்பாடான திட்டத்துக்கமையவே வெளிநாடு சென்றுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவருவதாக குற்றத்தடுப்பு விசாரணைத் திணைக்களத்தின் டிஜிட்டல் பிரிவு அரசாங்கத்துக்கு தெரிவித்துள்ளது.

அந்தப் பிரிவு, அறிக்ைகயொன்றின் மூலம் அந்த விடயத்தை அரசாங்கத்துக்கு முன்வைத்துள்ளது. நீதிபதி செப்டெம்பர் 25 ஆம் திகதி இந்தியாவுக்குச் செல்வதற்காகவே வெளிநாட்டுக்கான விடுமுறையொன்றை கோரியுள்ளதுடன் அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அவரது முன்னேற்பாட்டு திட்டத்துக்கிணங்க செப்டெம்பர் 24 ஆம் திகதி

அவர் வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ளதாகவும் திட்டமிட்ட இந்தச் செயல் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முன்னாள் நீதிபதி ரி. சரவணராஜாவுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து கோரப்பட்டிருந்த பதவி விலகல் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

தமக்கு அச்சுறுத்தல் இருப்பதாக நீதிபதி இதற்கு முன்னர் எந்த சந்தர்ப்பத்திலும் பொலிசார் மற்றும் நீதிச்சேவை ஆணைக் குழுவுக்கு முறைப்பாடு செய்திருக்கவில்லை என்பதுடன் 23ஆம் திகதி இராஜினாமா கடிதத்தை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்கி 24 ஆம் திகதி அவர் வெளிநாடு சென்றுள்ளார்.

நீதிபதியை பிரதிவாதியாக்கி மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதியின் மனைவி முல்லைத்தீவு மேலதிக மஜிஸ்திரேட் டி. பிரதீபன் முல்லைத்தீவு பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி. யு. பி. அமரதுங்க முல்லைத்தீவு பதில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யு. ஏ. எச். என். கே. திலகரத்ன, மாவட்ட நீதிபதியின் பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தர் பொலிஸ் சார்ஜண்ட் கே. எஸ். பிரேமன், பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தராக செயற்பட்டுள்ள பொலிஸ் சார்ஜண்ட் கே. சிவகாந்தன், முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி எம். முதியன், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களான சமரகோன் மற்றும் சாந்தரூவன், முல்லைத்தீவு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் பதிவாளர் பி. சரவணராஜ், நீதிபதியின் நீதிமன்ற அலுவலராக செயற்பட்ட பி. சுவிக்கான், முல்லைத்தீவு மஜிஸ்திரேட் நீதிமன்ற பிஸ்கல் உத்தியோகத்தர் எஸ். சிவக்குமார், முல்லைத்தீவு நீதிமன்றத்தின் உத்தியோகத்தர் ஜே. லிண்டன்ராஜா ஆகியோரதும் வாய்மூல முறைப்பாடு இந்த விசாரணையின் போது பதிவுசெய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அவர்கள் அனைவருமே நீதிபதி சரவணராஜா தமக்கு மரண அச்சுறுத்தல் உள்ளதாக எந்தச் சந்தர்ப்பத்திலும் எவரிடமும் தெரிவிக்கவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேற்படி அறிக்கைக்கிணங்க முன்னாள் நீதிபதி ரி. சரவணராஜா கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 05 ஆம் திகதி முல்லைத்தீவு மாஜிஸ்திரேட் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதுடன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தினால் அவருக்கு அனைத்து பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. எந்த சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு அல்லது மரண அச்சுறுத்தல் தொடர்பில் எத்தகைய பிரச்சினையும் இருக்கவில்லை.

முல்லைத்தீவு நீதிபதி கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி துபாய்க்கு புறப்பட்டு சென்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது. அதற்காக எயார் அரேபியா விமான சேவைக்கான விமான டிக்கெட் குருநாகல் விற்பனை முகவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன் அனைத்து நடவடிக்கைகளும் அமெரிக்காவின் தொலைபேசி இலக்கமொன்றின் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த தொலைபேசி இலக்கம் செயற்படாவிட்டால் மீண்டும் அழைப்பதற்காக கென்யாவின் தொலைபேசி இலக்கமொன்று டிக்கெட் விற்பனை முகவர் ஒருவரால் பெற்றுக்கொடுக்கப் பட்டுள்ளது.

விமான டிக்கெட்டுக்கான கொடுப்பனவு கல்முனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த டிக்கெட்டில் சார்ஜா, நைரோபி, டில்லி ஊடாக ஒகடோபர் 12 ஆம் திகதி மீண்டும் இந்த நாட்டுக்கு வரக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கிணங்க நீதிபதி சார்ஜாவிலிருந்ததன் பின்னர் இதுவரை நைரோபி வரை செல்வதற்கு இதுவரை விமான டிக்கெட்டை உபயோகித்திருக்கவில்லை என்றும் உறுதிப்படுத்தப் பட்டுள்தென்றும் அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

சரவணராஜாவுக்கு எந்த உயிர் அச்சுறுத்தலும் இருக்கவில்லை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT